நடிகர் நாக சைதன்யாவின் 24-வது பட தலைப்பு அவரது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று வெளியிடப்பட்டது.
சாய் பல்லவியுடன் நாகசைதன்யா நடித்த தண்டேல் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. இதையடுத்து அவர் ஹீரோவாக நடிக்கும் படத்தை கார்த்திக் தண்டு இயக்கி வருகிறார். பான் இந்தியா படமாக உருவாகும் இதில் மீனாட்சி சவுத்ரி நாயகியாக நடிக்கிறார். ‘லாபதா லேடீஸ்’ஸ்பர்ஷ் ஸ்ரீவஸ்தவா வில்லனாக நடிக்கிறார்.
அஜனிஷ் லோக்நாத் இசை அமைத்துள்ள இந்த மிஸ்டர் த்ரில்லர் படம் சுமார் ரூ.120 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்படுவதாகக் கூறப்படுகிறது, ஸ்ரீவெங்கடேஷ்வரா சினிசித்ரா சார்பில் பிவிஎஸ்என் பிரசாத், சுகுமார் இணைந்து தயாரிக்கும் இந்த மிஸ்டரி த்ரில்லர் படத்தின் தலைப்பு நேற்று வெளியிடப்பட்டுள்ளது. படத்துக்கு ‘விருஷகர்மா’என்று தலைப்பு வைத்துள்ளனர்.