தென்னிந்திய சினிமா

மீண்டும் தள்ளிப் போகிறதா ‘டாக்ஸிக்’ ரிலீஸ்?

நிலா

கீது மோகன்​தாஸ் இயக்​கத்​தில் யாஷ் கதா​நாயக​னாக நடித்​துள்ள படம், ‘டாக்​ஸிக் : எ ஃபேரி டேல் ஃபார் குரோன்​-அப்​ஸ்’.

இதில் கியாரா அத்​வானி, நயன்​தா​ரா, ஹூமா குரேஷி, ருக்​மணி வசந்த் என பலர் நடித்​துள்​ளனர். கன்​னடம், ஆங்​கிலத்​தில் உருவாகி​யுள்ள இப்​படம் இந்​தி, தெலுங்​கு, தமிழ், மலை​யாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளி​யாக இருக்​கிறது.

          

கேவிஎன் புரொடக் ஷன்ஸ் நிறு​வனம் யாஷின் மாஸ்​டர்​ மைண்ட் நிறு​வனத்​துடன் இணைந்து தயாரித்​துள்ள இப்​படம் மார்ச் 19-ம் தேதி வெளி​யாக இருப்​ப​தாக அறிவிக்​கப்​பட்டு இருந்​தது. ஆனால் மத்​திய கிழக்கு நாடு​களில் நடந்து வரும் போர் காரண​மாகப் படத்தின் ரிலீஸ் தேதி​யை, ஜூன் 4ம் தேதிக்​குத் தள்ளிவைப்​ப​தாக படக்​குழு அறி​வித்​திருந்​தது.

இந்​நிலை​யில் இப்​படத்​தின் ரிலீஸ் மீண்​டும் தள்ளி வைக்கப்படுவதாகத் தகவல் வெளி​யானது. இதை படக்​குழு தரப்பில் மறுத்​துள்​ளனர். இப்​படத்​துக்​கான புரமோஷன் பணி​கள் விரை​வில் தொடங்க இருப்​ப​தாகப் படக்​குழு தெரி​வித்​துள்​ளது.

SCROLL FOR NEXT