தென்னிந்திய சினிமா

தனது அடையாளத்தை மாற்றி 12 வருடமாக முன்னணி ஹீரோ படங்களில் நடித்து வந்த கொலை குற்றவாளி!

நிலா

தனது அடை​யாளத்தை மாற்​றி, முன்​னணி ஹீரோ படங்​களில் துணை நடிக​ராக நடித்​துள்ள கொலைக்​குற்​ற​வாளியை போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர்​.

குஜ​ராத்​தைச் சேர்ந்​தவர் ஹேமந்த் மோடி (53). கடந்த 2005-ம் ஆண்டு அகம​தா​பாத்​தின் நரோடா பகு​தி​யில் நடை​பெற்ற ஒரு கொலை வழக்​கில் இவருக்கு நீதி​மன்​றம், ஆயுள் தண்​டனை விதித்​தது.

இதைத் தொடர்ந்து மெஹ்​சானா மாவட்​டச் சிறை​யில் அடைக்​கப்​பட்​டார். கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை மாதம், 30 நாட்​கள் பரோலில் வெளியே வந்த அவர், அதன்​பின் போலீ​ஸில் சரணடை​யாமல் தலைமறை​வா​னார். அவரைத் தேடி வந்​தனர்.

இந்​நிலை​யில் மும்​பைக்​குச் சென்ற ஹேமந்த் மோடி, அங்கு தனது அடை​யாளத்தை முழு​மை​யாக மாற்​றி​னார். ‘ட்​விங்​கிள் தவே’, ‘ஸ்​பந்​தன் மோடி’ ஆகிய புனைபெயர்​களு​டன் பாலிவுட்​டில் துணை நடிக​ராக நுழைந்​தார்.

கடந்த 8 ஆண்​டு​களுக்​கும் மேலாகப் பல திரைப் படங்​கள் மற்​றும் சின்​னத்​திரை தொடர்​களில் துணை நடிக​ராக நடித்து வந்​துள்​ளார். ஆமிர் கான், அமி​தாப்​பச்​சன் நடிப்​பில் வெளி​யான ‘தக்ஸ் ஆஃப் ஹிந்​தோஸ்​தான்’, ரன்​வீர் சிங்​கின் ‘ஜெயேஷ்​பாய் ஜோர்​தார்’, மோகன்​லால் நடித்த ‘L2: எம்​பு​ரான்’, சன்னி தியோலின் ‘லாகூர் 1947’ உள்பட பல பெரிய பட்​ஜெட் திரைப்​படங்​களில் நடித்​துள்​ளார்.

சில குஜ​ராத்தி தொடர்​களிலும் நடித்​திருக்​கிறார். இந்​நிலை​யில், சமீபத்​தில் அவர் மீண்​டும் அகம​தா​பாத்​துக்கு வந்​த​போது, கீகண்டா மெட்ரோ நிலை​யம் அருகே குற்​றப்​பிரிவு போலீ​ஸார் கைது செய்​தனர்.

ஹேமந்த் மோடி தற்​போது மீத​முள்ள சிறைத் தண்​டனையை அனுப​விப்​ப​தற்​காக மீண்​டும் மெஹ்​சானா சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்​ளார். தன் அடை​யாளத்தை மறைத்து கொலைக் குற்​ற​வாளி ஒரு​வர் திரைப்​படங்​களில் நடித்து வந்​தது, பாலிவுட்​டில் பரபரப்பை ஏற்​படுத்தி இருக்​கிறது.

SCROLL FOR NEXT