தென்னிந்திய சினிமா

நடிகையாக அறிமுகமானார் மோகன்லால் மகள் விஸ்மயா

நிலா

மோகன்​லாலின் மகன் பிரணவ் மலை​யாளப் படங்​களில் நடித்து வரும் நிலை​யில் அவர் மகள் விஸ்​ம​யா, ‘துடக்​கம்’ என்ற படம் மூலம் நடிகை​யாக அறி​முக​மாகியுள்ளார். ஜூட் ஆண்​டனி ஜோசப் இயக்​கி​யுள்ள இதில் டொவினோ தாமஸ், சாய் குமார், மியா ஜார்ஜ் உள்பட பலர் நடித்​துள்​ளனர். குடும்​பப் பின்​னணி​யுடன் கூடிய சஸ்​பென்ஸ் த்ரில்​ல​ரான இப்​படம் நேற்று வெளி​யானது. இந்​நிலை​யில், நடிகர் மோகன்​லால் தனது மகள் பற்றி பேசி​யுள்​ளார்.

அவர் கூறும்​போது, “விஸ்​மயா இந்​தப் பயணத்​துக்​காகத் தன்னை நன்​றாகத் தயார்​படுத்​தி​யிருக்​கிறார். அவர் ஓவி​யம், நடனம், தற்​காப்​புக் கலை உள்​ளிட்ட பல துறை​களில் பயிற்சி பெற்​றிருப்​ப​தால், அவருக்கு வலு​வான அடித்​தளம் இருக்​கிறது.

ஆனால் நடிப்​பு, முழு​மை​யான அர்ப்​பணிப்பை கோரும் தொழில். சரி​யான மனநிலை​யுடன் அணுகி​னால், அது அழகான தொழிலாக இருக்​கும். நடிகரின் மகள் என்​ப​தால் இயல்​பாகவே அதிக கவன​மும் விமர்​சனங்​களும் இருக்​கும். அதைத் தவிர்க்க முடி​யாது. ஆனால் அந்​தப் பொறுப்​பை​யும், அழுத்​தத்​தை​யும் ஏற்​றுக்​கொள்​ளும் மனப்​பக்​கு​வம் விஸ்​ம​யா​விடம் இருக்​கிறது.

ரசிகர்​கள் அவரை அவரது சொந்த திறமை​யின் அடிப்​படை​யில் மதிப்​பீடு செய்​வார்​கள் என்று நம்​பு​கிறேன். அவர் நடிகை​யான​தால் ஒரு தந்​தை​யாக எனக்​குப்பெரு​மை. ஆனால், ஒரு நடிக​ராக அவர் தனது அடை​யாளத்தை உரு​வாக்க வேண்​டும். அதற்​கான பயணத்தை அவர் இப்​போது தொடங்கி இருக்​கிறார்” என்​றார்.

SCROLL FOR NEXT