மோகன்லால் மற்றும் சிரஞ்சீவி
படம்: எக்ஸ் தளம்
சிரஞ்சீவி நடிக்கவுள்ள அடுத்த படத்தில் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அனில் ரவிப்புடி இயக்கத்தில் உருவாகி வரும் ‘மனசங்கர வரபிரசாத் காரு’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சிரஞ்சீவி. ஜனவரி 12-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகளும் தொடங்கப்படவுள்ளன. இப்படத்தினைத் தொடர்ந்து பாபி கொல்லி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் சிரஞ்சீவி.
கே.வி.என் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதத்தில் தொடங்க படக்குழு ஆயுத்தமாகி வருகிறது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் மோகன்லால்.
சிரஞ்சீவி – மோகன்லால் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும், இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படமாக இது அமைந்துள்ளது.
இதன் ஒளிப்பதிவாளராக நிமிஷ் ரவி பணிபுரியவுள்ளார். இதில் நடிக்கவுள்ள இதர நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படமே சிரஞ்சீவி நடிப்பில் உருவாகும் படங்களில் பெரும் பொருட்செலவைக் கொண்டது என தகவல்கள் வெளியாகியுள்ளன.