தென்னிந்திய சினிமா

பிரியதர்ஷனின் 100-வது படத்தில் மோகன்லால்

ப்ரியா

மலை​யாள இயக்​குநர் பிரியதர்ஷன் தமிழில், கோபுர வாசலிலே, சினேகி​தி​யே, லேசா லேசா, காஞ்​சிவரம், நிமிர், அப்​பத்தா ஆகிய படங்​களை இயக்​கி​யுள்​ளார். இந்தியிலும் பல படங்​களை இயக்​கி​யுள்ள இவர் இப்​போது, அக் ஷய் குமார் நடிப்​பில் ‘பூத் பங்​களா’ எனும் காமெடி படத்தை இயக்கி இருக்​கிறார்.

இப்​படம் விரை​வில் வெளி​யாக இருக்​கிறது. இதையடுத்து அக் ஷய்​கு​மார், சைஃப் அலி​கான் நடிப்​பில் ‘ஹை​வான்’ என்ற படத்​தை​யும் இயக்​கி​யுள்​ளார். இது அவருக்கு 97-வது படம். அவரது 98- வது படத்​தில் பங்​கஜ் திரி​பா​தி, அன்னு கபூர், சவுரப் சுக்லா நடிக்க இருக்​கின்​றனர். இந்​நிலை​யில் அவர் அளித்​துள்ள பேட்​டி​யில், தனது முதல் படத்​தில் நடித்த மோகன்​லால் தன்​னுடைய 100 -வது படத்​தி​லும் கதா​நாயக​னாக நடிப்​பார் என்று தெரி​வித்​துள்​ளார்.

          

இதுபற்றி அவர் கூறும்​போது, ” முதல் பட கதா​நாயகனே 100-வது படத்​தி​லும் நாயக​னாக நடிப்​பது உலக வரலாற்றில் ஒரு​போதும் நடந்​த​தில்​லை. கடவுள் உதவினால் அது நடக்​கும் என்று நம்​பு​கிறேன். நாங்​கள் மீண்​டும் இணை​யும் படம் நகைச்​சுவைப் படமாக இருக்காது. இசையை அடிப்​படை​யாகக் கொண்​ட​தாக இருக்​கும்.

அப்​படம் பற்றி இப்​போது அறிவிக்​க​வில்​லை” என்று தெரி​வித்​துள்​ளார். பிரியதர்​ஷன் இயக்​கத்​தில் மோகன்​லால் நடித்​துள்ள பல படங்​கள் சூப்​பர் ஹிட்​டாகி இருக்​கின்​றன. அதனால் இப்​படத்​துக்​கும் இப்​போதே எதிர்​பார்ப்பு அதிகரித்​துள்​ளது.

SCROLL FOR NEXT