இயக்​குநர் சிதம்​பரம்

 
தென்னிந்திய சினிமா

“​நான் சர்​வைவல் த்ரில்​லர் ஸ்பெஷலிஸ்ட் இல்​லை” - ‘மஞ்ஞும்மள் பாய்​ஸ்’ இயக்குநர் விளக்​கம்

ப்ரியா

சவுபின் சாஹிர், ஸ்ரீநாத் பாஸி உட்பட பலர் நடித்து வெளி​யான மலை​யாள படம், ‘மஞ்​சும்​மள் பாய்​ஸ்’. கொடைக்​கானல் குணா குகை​யில் நடந்த உண்​மைச் சம்​பவத்தை அடிப்​படை​யாக வைத்து உரு​வான இந்​தப் படம், மலை​யாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்​கிலும் சூப்பர் ஹிட்​டானது. உலகம் முழு​வதும் ரூ.250 கோடிக்​கும் அதி​க​மாக வசூலித்​தது. இதை சிதம்​பரம் இயக்கி இருந்​தார்.

இதையடுத்து அவர் ‘பாலன்’ என்ற படத்தை இயக்​கி​யுள்​ளார். ‘ஆவேஷம்’ இயக்​குநர் ஜித்து மாதவன் இதன் கதையை எழுதியுள்ளார். படப்​பிடிப்பு முடிவடைந்​து, போஸ்ட் புரொடக் ஷன் வேலைகள் நடந்து வரு​கின்​றன. இந்​நிலை​யில் அவர் திலீப் நடிக்கும் படத்தை இயக்க இருப்​ப​தாக​வும் அது சர்​வைவல் த்ரில்லர் கதையைக் கொண்​டது என்​றும் செய்​தி​கள் வெளியாகின.

அதை மறுத்​துள்ள இயக்​குநர் சிதம்​பரம், “இந்த வகை​யான தகவல்​கள் எப்​படி வெளிவரு​கின்றன என்​பது தெரிய​வில்​லை. நான் தற்​போது ‘பாலன்’ படத்​தின் பணி​களில் மட்​டுமே கவனம் செலுத்தி வரு​கிறேன். சமூக ஊடகங்​களில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போன்ற எந்த நோக்​க​மும் எனக்கு இல்லை. நான் சர்​வைவல் த்ரில்​லர் படங்​களின் ஸ்பெஷலிஸ்ட் இல்​லை” என்று தெரி​வித்​துள்​ளார்.

          
SCROLL FOR NEXT