பாலையா நடிக்கவுள்ள அடுத்த படத்தில் மஞ்சு மனோஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
’வீர சிம்ஹா ரெட்டி’ படத்துக்குப் பிறகு பாலையா – கோபிசந்த் மாலினேனி இணைந்து படம் செய்கிறார்கள். இதன் படப்பூஜை முடிவடைந்து, படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. ’பெத்தி’ படத்தின் தயாரிப்பாளரான விரக்தி சினிமாஸ் நிறுவனம் இப்படத்தினையும் தயாரிக்கவுள்ளது. வரலாற்றுப் படமாக அறிவிக்கப்பட இப்படம், பட்ஜெட் பிரச்சினையால் கதையினை மாற்றி படமாக்கப்பட்டு வருகிறது.
தற்போது இப்படத்தில் பாலையா உடன் மஞ்சு மனோஜ் நடிக்கவிருப்பது உறுதியாகி இருக்கிறது. மஞ்சு மனோஜ் பிறந்தநாளை முன்னிட்டு இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது படக்குழு. இதில் மஞ்சு மனோஜ் வில்லனாக நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், இப்படத்தின் நாயகியாக நயன்தாரா ஒப்பந்தமாகி இருந்தார். இப்படத்தில் நடைபெற்ற கதையின் மாற்றத்தினால் இப்படத்திலிருந்து விலகிவிட்டார். தற்போது அவருக்கு பதிலாக காஜல் அகர்வால் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.