தென்னிந்திய சினிமா

மருத்துவமனையில் மமிதா பைஜு அனுமதி

நிலா

நடிகை மமிதா பைஜு உடல் நலக்​குறைவு காரண​மாக மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ள​தால் ஆஸ்​திரேலி​யா​வில் அவர் கலந்​து​கொள்​வ​தாக இருந்த நிகழ்ச்சி ஒத்தி வைக்​கப்​பட்​டுள்​ளது.

‘பிரேமலு’ படம் பிரபல​மான மலை​யாள நடிகை மமிதா பைஜு, தமிழில் ரிபெல், டியூடு, ஜனநாயகன், விஸ்​வ​நாத் அண்ட் சன்ஸ் ஆகிய படங்​களில் நடித்​துள்​ளார். அவர் நடித்​துள்ள ‘பெத்​ல​கேம் குடும்ப யூனிட்’ தற்​போது ஓடிக்​கொண்​டிருக்​கிறது. தெலுங்கு படங்​களி​லும் நடித்து வரும் அவர் ஆஸ்​திரேலியாவின் மலை​யாளி​கள் சங்​கம் ஏற்​பாடு செய்​திருந்த ஓணம் பண்​டிகை விழா​வில் சிறப்பு விருந்​தின​ராக செப்​.5-ம் தேதி கலந்​து​கொள்ள இருந்​தார்.

இந்​நிலை​யில் உடல் நலக்​குறைவு காரண​மாக மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப் பட்​டுள்​ளார். இதனால் பயணத்​தைத் தவிர்க்​கு​மாறும், முழு​மை​யான ஓய்வு எடுக்​கு​மாறும் மருத்​து​வர்​கள் அறி​வுறுத்​தி​யுள்​ளனர். இதனால் அவருடைய ஆஸ்​திரேலிய நிகழ்ச்சி ஒத்தி வைக்​கப்​பட்​டுள்​ளது.

இதற்​கிடையே, வீடியோ ஒன்றை மமிதா பைஜு வெளியிட்டுள்ளார். அதில், ‘‘ஆஸ்​திரேலியாவின் மலை​யாளி​கள் சங்​கம் நிகழ்ச்​சி​யில் பங்​கேற்க முடி​யாத​தில் மிகுந்த வருத்​தம். இதற்​காக அனை​வரிட​மும் மன்​னிப்பு கேட்டுக் கொள்கிறேன்’’ என்று குறிப்​பிட்​டுள்​ளார்.

SCROLL FOR NEXT