தென்னிந்திய சினிமா

மலை​யாள நடிகர் ஸ்ரீனி​வாசன் ​மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல்

செய்திப்பிரிவு

மலை​யாள சினி​மா​வின் மூத்த நடிகரும் இயக்​குநரு​மான ஸ்ரீனி​வாசன் (69) கால​மா​னார்.

கடந்த சில நாட்​களாக உடல் நலக்​குறை​வால் பாதிக்​கப்​பட்​டிருந்த அவர், கொச்சி அரு​கிலுள்ள திருப்​பூணித்​துறா மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்கப்​பட்​டிருந்​தார். அங்கு சிகிச்சை அளிக்​கப்​பட்டு வந்​த நிலை​யில் நேற்று காலை உயி​ரிழந்​தார்.

பின்​னர் அவர் உடல் எர்​ணாகுளத்​தில் உள்ள அவரது சொந்த ஊரான கண்​ட​நாடுக்கு கொண்டு செல்​லப்​பட்​டது. அங்கு உறவினர்​கள், நெருங்​கிய நண்​பர்​கள் உடலுக்கு அஞ்​சலி செலுத்​தினர்.

பின்​னர் எர்​ணாகுளம் டவுன் ஹாலில் பொது​மக்​கள் அஞ்​சலிக்​காக வைக்​கப்​பட்​டது. அங்கு திரை​யுல​கினர் மற்​றும் ரசிகர்​கள் உள்பட ஏராள​மானோர் அஞ்​சலி செலுத்​தினர். அவருடைய இறு​திச் சடங்கு இன்று (டிச.21) காவல் துறை மரியாதையுடன் நடக்​கிறது. மறைந்த ஸ்ரீனி​வாசனுக்கு விமலா என்ற மனை​வி, தியான், வினீத் ஆகிய மகன்​கள் உள்ளனர்.

50 ஆண்​டு​களுக்கு மேலாகத் திரை​யுல​கில் இருந்த ஸ்ரீனி​வாசன், 225 படங்​களில் நடித்​துள்​ளார். தமிழில், லேசா லேசா, புள்​ளக்​குட்​டிக்​காரன் உள்​ளிட்ட படங்​களில் நடித்​துள்​ளார். திரைக்​கதை​யாசிரியர், இயக்​குநர், தயாரிப்​பாளர் என பல முகங்​களைக் கொண்ட அவரது படங்​களில் காமெடிக்கு முக்​கி​யத்​து​வம் இருக்​கும்.

கதபற​யும்​போல், தட்​டத்​தின் மறயத்து ஆகிய படங்​களைத் தயாரித்​துள்ள அவர், வடக்​கு நோக்கி எந்​திரம் உள்பட சில படங்​களை இயக்​கி​யுள்​ளார். இந்​தப் படம் தமிழில் திண்​டுக்​கல் சாரதி என்ற பெயரில் ரீமேக் ஆனது.

ஸ்ரீனி​வாசன் மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், மம்​மூட்​டி, மோகன்​லால், பிருத்​வி​ராஜ், திலீப், மஞ்​சு​வாரியர் உள்பட ஏராள​மான திரை​யுல​கினரும் ரசிகர்​களும் இரங்கல் தெரி​வித்​துள்​ளனர்.

நடிகர் ரஜினி​காந்த் வெளி​யிட்​டுள்ள இரங்​கலில், “என் நல்ல நண்​பன் ஸ்ரீனி​வாசன் மரணச் செய்​தி​யைக் கேட்​டதும் அதிர்ச்​சி​யாக இருந்தது. அவர் திரைப்​படக் கல்​லூரி​யில் என் வகுப்​புத் தோழர். ஒரு சிறந்த இயக்​குநர், நடிகர் மட்​டுமல்ல, மிக​வும் நல்ல மனிதர். அவரது ஆன்மா சாந்தி​யடையட்​டும்” எனக் குறிப்​பிட்​டுள்​ளார்.

SCROLL FOR NEXT