நடிகை பூமி ஷெட்டி
பிரசாந்த் வர்மா இயக்கத்தில், தேஜா சஜ்ஜா நாயகனாக நடித்த ‘ஹனு- மேன்’ திரைப்படம் வரவேற்பைப் பெற்றது.
இதில், வினய் ராய், வரலட்சுமி, அமிர்தா ஐயர் என பலர் நடித்திருக்கிறார்கள். ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த படமாக ‘மஹாகாளி’ உருவாகி வருகிறது. ஆர்கேடி ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்கே துக்கல் மற்றும் ரிவாஸ் ரமேஷ் துக்கல் தயாரிக்கின்றனர். ஸ்மரன் சாய் இசை அமைக்கிறார். சுரேஷ் ரகது ஒளிப்பதிவு செய்கிறார்.
புராண காவியமாக உருவாகி வரும் இப்படத்தில் பூமி ஷெட்டி, டைட்டில் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அக் ஷய் கன்னா, ரோஹித் சராஃப் என பலர் நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. 125 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது என்றும் பிரம்மாண்டமான திரையரங்க அனுபவத்தை வழங்கும் வகையில், ஐமேக்ஸில் இப்படம் வெளியாக இருக்கிறது என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.