தென்னிந்திய சினிமா

’கிங்டம் 2’ ஒத்திவைப்பு: தயாரிப்பாளர் தகவல்

ஸ்டார்க்கர்

’கிங்டம் 2’ படம் ஒத்திவைக்கப்பட்டதாக தயாரிப்பாளர் நாக வம்சி தெரிவித்துள்ளார்.

விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான படம் ‘கிங்டம்’. அனிருத் இசையமைப்பில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியானது. ஆனால் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படம் மக்களிடையே எடுபடவில்லை. 2025-ம் ஆண்டின் தோல்வி படங்களில் ஒன்றாக அமைந்தது. மேலும், ‘கிங்டம்’ படத்தின் கதை இன்னும் முடியவில்லை. இதனால் இதன் 2-ம் பாகம் குறித்து கேள்வி எழுந்து வந்தது.

தற்போது தயாரிப்பாளர் நாக வம்சி அளித்த பேட்டியில், ‘கிங்டம் 2’ ஒத்திவைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். முதல் பாகத்தின் தோல்வியால் இந்த முடிவினை அவர் எடுத்திருப்பது தெரிகிறது. மேலும், ‘கிங்டம்’ படம் தொடர்பாக இயக்குநரிடம் எவ்வளவோ பேசியும், அவர் கேட்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

’ஜெர்சி’ இயக்குநர் கெளதம் தின்னூரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, பாக்யஸ்ரீ போஸ், சத்யதேவ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘கிங்டம்’. நாகவம்சி தயாரிப்பில் வெளியான இப்படம் அனைத்து மொழிகளிலும் வெளியானது. ஆனால், எந்தவொரு மொழியிலும் இப்படம் எடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT