தென்னிந்திய சினிமா

யூடியூப்​பில் இருந்து ‘கேடி: தி டெவில்’ டிரெய்​லர் திடீர் நீக்கம்

நிலா

துருவா சர்ஜா ஹீரோ​வாக நடித்​துள்ள பான் இந்​தியா திரைப்​படம், ‘கேடி: தி டெவில்’. இதில் சஞ்​சய் தத், ஷில்பா ஷெட்​டி, வி.ரவிச்சந்திரன், ரமேஷ் அரவிந்த், ரீஷ்மா நானை​யா, நோரா ஃபதேஹி உள்ளிட்ட பலர் நடித்​துள்​ளனர். பிரேம் இயக்​கி​யுள்ள இப்படத்தை ‘ஜன​நாயகன்’ படத்​தைத் தயாரித்​துள்ள கே.​வி.என் புரொடக் ஷன்ஸ் தயாரித்​துள்​ளது.

இப்​படத்​தில் இருந்து வெளி​யான குத்​துப் ​பாடலின் இந்​திப் பதிப்பு சில மாதங்​களுக்கு முன் கடும் விமர்​சனங்​களை எதிர்​கொண்​டது. பல்​வேறு இந்தி பிரபலங்​கள் எதிர்ப்பு தெரி​வித்​த​தால் யூடியூப்​பில் இருந்து அப்​பாடல் நீக்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில் இப்​படத்​தின் டிரெய்​லர் ஏப்​.22-ம் தேதி வெளி​யானது. ஆனால் கேவிஎன் நிறுவனம் யூடியூப்​பில் இருந்து அதை திடீரென நேற்று முன் தினம் நீக்கி​ உள்​ளது.

இது குறித்து அந்​நிறு​வனம் வெளி​யிட்​டுள்ள எக்ஸ் தளப் பதி​வில், “தணிக்கை நடை​முறை​யின் போது, சான்​றிதழ் பெறாத சில காட்சிகள் கவனக்​குறை​வாக அதில் இடம் பெற்​று​விட்​டன. அதனால் அந்த முன்​னோட்ட காட்​சியை நீக்​கி​யுள்​ளோம்.

தணிக்கை வழி​காட்​டு​தல்​களுக்கு இணங்க, திருத்​தப்​பட்ட புதிய பதிப்பை விரை​வில் பதிவேற்​று​வோம். இந்த கவனக்​குறைவுக்கு வருந்​துகிறோம். தணிக்கை விதி​முறை​கள் அனைத்​தை​யும் முழுமை​யாகப் பின்​பற்​று​வ​தில் உறு​தி​யாக இருக்​கிறோம்” என்று கூறி​யுள்​ளது.

SCROLL FOR NEXT