டொவினோ தாமஸ், கயாது லோஹர் நடிக்கும் படம் ‘பள்ளிச்சட்டம்பி’. டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கியுள்ள இப்படத்தின் கதை 1950–60-களில் நடப்பது போல அமைக்கப்பட்டுள்ளது.
வேர்ல்ட்வைட் ஃபிலிம்ஸ் சார்பில் நவுஃபல் மற்றும் பிரிஜீஷ், சி க்யூப் ப்ரோஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் சாணக்கியா சைதன்யா சரண் ஆகியோர் தயாரிக்கின்றனர்.
மலையாளத்தில் உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 5 மொழிகளில் ஏப்.9-ம் தேதி வெளியாக உள்ளது. ஜேக்ஸ் பிஜாய் இசை அமைக்கிறார். டிஜோ டோமி ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்திலிருந்து, ‘காட்டு செண்பகம்’ என்ற பாடல் வெளியாகி இருக்கிறது. தமிழ்ப் பதிப்புக்கான பாடலை மோகன் ராஜன் எழுதியுள்ளார். அகில் ஜே சந்த், ஆவ்னி மல்ஹர் பாடியுள்ள இப்பாடல் வரவேற்பைப் பெற்று வருகிறது. கயாது லோஹர், தமிழில் ‘டிராகன்’ படத்தில் நடித்ததன் மூலம் கவனிக்கப்பட்டார். ‘இதயம் முரளி’ உள்பட சில தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார்.