நாக் அஸ்வின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘கல்கி 2898 ஏடி’. இதில் அமிதாப்பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன், துல்கர் சல்மான் உள்ளிட்ட பலர் நடித்தனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்தார்.
இப்படம் 2024-ம் ஆண்டு தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. ரூ.1,100 கோடிக்கும் அதிகமாக வசூலித்த இதன் 2-ம் பாகம் உருவாகி வருகிறது. இதில் சுமதி என்ற கதாபாத்திரத்தில் நடித்த தீபிகா படுகோன் விலகியதால் அவருக்குபதில் வேறொரு நடிகையை நடிக்க வைக்க உள்ளனர்.
சாய் பல்லவி நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாயின. இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. வில்லனாக நடிக்கும் கமல்ஹாசனுக்கு இரண்டாம் பாகத்தில் முக்கியத்துவம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதன் படப்பிடி ப்பு ஹைதராபாத் அருகிலுள்ள சங்கரபள்ளியில் பிரம்மாண்ட w அரங்கம்அமைத்து நடந்து வருகிறது. முதல் பாகம் வெளியாகி 20 மாதங்களுக்கு பிறகு தொடங்கியுள்ள முதல் ஷெட்யூலில் கமல்ஹாசனும் அமிதாப்பச்சனும் பங்குபெறும் காட்சிகள் படமாக்கப்படுகின்றன. பிரபாஸ் நடிக்கும் காட்சிகள் பின்னர் படமாக்கப்பட இருக்கின்றன.