தென்னிந்திய சினிமா

‘டிராகன்’ படத்துக்காக 15 கிலோ எடை குறைந்த ஜூனியர் என்டிஆர்

நிலா

‘கே.ஜி.எஃப்’, ‘சலார்’ படங்​களை இயக்​கிய பிர​சாந்த் நீல், அடுத்து இயக்​கும் ‘டி​ராகன்’ படத்​தில் ஜூனியர் என்டிஆர் கதா​நாயக​னாக நடிக்​கிறார். அவர் ஜோடி​யாக ருக்​மணி வசந்த் நடிக்​கிறார்.

மைத்ரி மூவி மேக்​கர்ஸ் தயாரிக்​கும் இந்​தப் படம் ஜூன் 11-ல் தெலுங்​கு, தமிழ், இந்தி உள்பட 5 மொழிகளில் வெளி​யாக இருக்​கிறது. இதன் முதல் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்​தில் வெளி​யாகி வரவேற்​பைப் பெற்​றுள்​ளது.

இதுபற்றி பேசிய பிர​சாந்த் நீல், ” டீஸரில் நாங்​கள் காட்​டி​யிருப்​பது வெறும் கதை​யின் பின்​னணி மட்​டும்​தான். அதி​லுள்ள விஷ​யங்​கள், படத்​தின் உண்​மை​யான கதைக்கு முற்​றி​லும் மாறானவை.

இது​வரை யாரும் பார்த்​தி​ராத சிறந்த தேசபக்​தி படத்தை உரு​வாக்க முயற்சி செய்​கிறோம், அதில் வெற்​றி​யும் பெறு​வோம். நான், ஜுனியர் என்​டிஆரை இக்​க​தா​பாத்​திரத்​துக்​காகச் சற்று எடையைக் குறைக்​கச் சொன்​னேன்.

ஆனால், அவர் அதை வெறித்​தன​மாக எடுத்​துக் கொண்​டு, 4 மாதங்​கள் தீவிர​மாக எடையைக் குறைத்​தார். ஒரு கட்​டத்​தில் அவர் மிக​வும் மெலிந்​து, வெளுத்​துக் காணப்​பட்​டார்.

எடையைக் குறைப்​பதை நிறுத்​தச் சொல்​லி​யும் கேட்​க​வில்​லை. இதைப் பார்த்​து​விட்டு அவருடைய குடும்​பத்​தினர், நண்​பர்​கள் என அனை​வரும் என் மீது​தான் கோபப்​பட்​டார்​கள்” என்​றார்.

SCROLL FOR NEXT