துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்துள்ள படம், ‘ஐ அம் கேம்’. இதை ‘ஆர்டிஎக்ஸ்’ படத்தை இயக்கிய நஹாஸ் ஹிதாயத் இயக்கியுள்ளார்.
இதில் கயாது லோஹர், ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அதிரடி த்ரில்லர் படமான இதற்கு ஜிம்ஷி காலித் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜேக்ஸ் பிஜாய் இசை அமைத்துள்ளார்.
துல்கர் சல்மானின் 40-வது திரைப்படமான இதை, அவருடைய வேஃபரர் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. பான் இந்தியா முறையில் 5 மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆக. 20-ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், போஸ்ட் புரொடக் ஷன் பணிகள் இன்னும் முடியாததால் ரிலீஸ் தள்ளிப் போகிறது. இந்த மாதம் பிரம்மாண்ட படங்களான ‘டாக்ஸிக்’, ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ ஆகிய படங்கள் வெளியாக இருப்பதாலும் ‘ஐ அம் கேம்’ படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்படுவதாக கூறப்படுகிறது.