தென்னிந்திய சினிமா

கிரிக்​கெட் வீரரை காதலிக்கிறாரா ஸ்ரீலீலா? - தாயார் மறுப்பு

நிலா

நடிகை ஸ்ரீலீலா, கிரிக்​கெட் வீரர் திலக் வர்மாவைக் காதலிப்​ப​தாக வெளி​யான தகவலை அவர் தாயார் மறுத்​துள்​ளார். கடந்த ஆண்டு டிசம்​பரில் திருப்​பதி கோயிலுக்​குத் தனது தாயாருடன் சென்று இருந்​தார் நடிகை ஸ்ரீலீலா. இந்​திய கிரிக்கெட் வீரர் திலக் வர்மா​வும் தனது குடும்​பத்​தினருடன் அன்று கோயிலுக்​குச் சென்றிருந்​தார்.

அப்​போது அவருடன் ஸ்ரீலீலாவை இணைத்து வந்த செய்தி விவாதத்தை ஏற்​படுத்​தி​யது. பின்​னர் தர்​ம​சாலா​வில் நடந்த ஐபிஎல் போட்​டி​யில், மும்பை இந்​தி​யன்ஸ் வீரர்​களு​டன் ஸ்ரீலீலா​வின் தாயார் சுவர்​ணலதா காணப்​பட்​டார். தவிர, மும்பை வான்​கடே மைதானத்​தில் நடந்த டி20 உலகக்​கோப்பை போட்​டி​யில், திலக் வர்​மா​வின் பெயர் பொறித்த ஜெர்​சியை அணிந்​திருந்த ஒரு​வருடன் ஸ்ரீலீலா நின்​றிருக்​கும் புகைப்படங்​களும் வைரலானது.

இதையடுத்து இரு​வரும் காதலிப்​ப​தாக சமூக வலை தளங்​களில் செய்தி பரவியது.இந்​நிலை​யில் ஸ்ரீலீலா​வின் தாயார் டாக்​டர் சுவர்ணலதா அதை மறுத்​துள்​ளார். “சமூக வலை​தளங்​களில் பரவி வரும் செய்​தி​கள் முற்​றி​லும் பொய்​யானவை மற்​றும் அடிப்​படை ஆதா​ரமற்​றவை. இது​போன்ற கதைகள் எவ்​வாறு உரு​வாகின்றன என்றே புரிய​வில்​லை. இந்​தச் செய்​தி​களில் எள்​ளள​வும் உண்மையில்​லை, கற்​பனையே” என்று அவர் தெரி​வித்​துள்​ளார்.

SCROLL FOR NEXT