தென்னிந்திய சினிமா

தமிழில் அதிக படங்​களில் நடித்திருக்க வேண்டும்: சமந்தா வருத்தம்

நிலா

நடிகை சமந்தா தயாரித்​து, நடித்​துள்ள ‘மா இண்டி பங்காரம்’ என்ற படம், தமிழில் ‘எங்கள் தங்கம்’ என்ற பெயரில் வெளியாகியுள்​ளது. இதை நந்​தினி ரெட்டி இயக்​கி​யுள்​ளார். இதில் குல்​ஷன் தேவ்​வய்​யா, திகாந்த், கவுதமி, மஞ்​சுஷா முக்​கிய வேடங்களில் நடித்​துள்​ளனர்.

இதை ராஜ் நிடிமொரு, சமந்தா மற்​றும் ஹிமாங்க் ரெட்டி துவ்​வுரு ஆகியோர் இணைந்து தயாரித்​துள்​ளனர். ஓம் பிர​காஷ் ஒளிப்பதிவு செய்​துள்ள இப்​படத்​துக்கு சந்​தோஷ் நாராயணன் இசை அமைத்​துள்​ளார். இப்​படம் பற்றி சமந்தா பேசும்​போது, “சென்​னைக்கு வரு​வது எப்​போதுமே எனக்கு வீட்​டுக்கு வரு​வது போன்​றது தான். தமிழில் இன்​னும் அதிக படங்​களில் நடித்​திருக்க வேண்​டும் என்று அடிக்​கடி நினைப்​பேன்.

அந்த வருத்​தம் இன்​னும் இருக்​கிறது. ஆனால் இன்​னும் காலம் இருக்​கிறது. நல்ல கதைகளும், நல்ல கதா​பாத்​திரங்​களும் வந்​தால் தமிழ்ப் படங்​களில் தொடர்ந்து நடிப்பேன். இந்​தப் படத்​தில் நடிகை​யாக மட்​டுமல்​லாமல் தயாரிப்​பாள​ராக​வும் பணியாற்றியுள்​ளேன். ஒரு படத்தை உரு​வாக்​கு​வதும் அதை வெளி​யிடு​வதும் எவ்​வளவு கடின​மான வேலை என்​பதை இந்​தப் படம் எனக்கு உணர்த்​தி​யது.

குறிப்​பாகப் படத்​தின் இறு​திக்​கட்ட பணி​கள் மிக​வும் சவாலானதாக இருந்​தன. இந்​தப் படம் உங்​களைப் பெருமைப்படுத்​தும் என்று நம்​பு​கிறேன். தமிழ் திரை​யுல​கம் என் வீடு. அந்த வீட்​டுக்​குப் பெருமை சேர்க்​கும் படமாக இது அமையவேண்​டும் என்​பதே என் விருப்​பம்” என்​றார்.

SCROLL FOR NEXT