தென்னிந்திய சினிமா

‘நயன்​தா​ரா’ படத்​தில் ‘தளப​தி’ பாடல்: இளை​ய​ராஜா அனு​மதி அளித்​தது எப்​படி?

செய்திப்பிரிவு

சிரஞ்​சீ​வி, நயன்​தாரா நடித்​துள்ள தெலுங்கு திரைப்​படம்​ ’மன சங்கர வரபிர​சாத் காரு’. அனில் ரவிபுடி இயக்​கி​யுள்ள இப்​படம் பொங்​கலை முன்​னிட்டு ஜன.12-ம் தேதி வெளி​யாகி வரவேற்​பைப் பெற்​றுள்​ளது. இதில் ரஜினி​யின் ‘தளப​தி’ படத்​தில், இளை​ய​ராஜா இசை​யில் வெளி​யாகி ஹிட்​டான ‘சுந்​தரி கண்​ணால் ஒரு சேதி’ பாடலை பயன்படுத்​தி​யுள்​ளனர்.

இது இப்​படத்​தில் சரி​யான இடத்​தில் பயன்​படுத்​தப்​பட்​டுள்​ள​தாக​வும் காட்​சிக்கு பொருத்​த​மாக இருப்​ப​தாக​வும் ரசிகர்​கள் கூறி வரு​கின்ற னர். இது​போன்று பயன்​படுத்​தி​னால் காப்​புரிமை வழக்​குப் போடும் இசை அமைப்​பாளர் இளை​ய​ராஜா, இப்​படத்​துக்கு எப்​படி அனு​மதி அளித்​தார் என்ற கேள்வி எழுந்​தது.

இதுபற்​றி, இயக்​குநர் அனில் ரவிபுடி​யிடம் கேட்​ட​போது, “ஒவ்​வொரு விஷ​யத்​துக்கும் ஒரு வழி​முறை இருக்​கிறது. இளை​ய​ராஜா பெரிய இசை ஜாம்​ப​வான். அவர் பாடலை பயன்​படுத்​தும் போது அவரிடம் முறை​யாக அனு​மதி பெற்று பயன்​படுத்​து​வது தான் சரி. நானும் தயாரிப்​பாள​ரும் அவரைச் சந்​தித்து இந்​தப் பாடலை பயன்​படுத்​திக் கொள்​வது பற்றி பேசினோம், அனு​மதி அளித்​தார்​” என்​றார்​.

SCROLL FOR NEXT