பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கத்தில் நிகில் சித்தார்த்தா ஹீரோவாக நடிக்கும் வரலாற்றுப் படம், ‘சுயம்பு’.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நடக்கும் கதையைக் கொண்ட இப்படத்தை தாகூர் மது வழங்க, பிக்சல் ஸ்டூடியோ சார்பில் புவன் மற்றும் ஸ்ரீகர் தயாரிக்கின்றனர்.
இதில் சம்யுக்தா நாயகியாக நடிக்கிறார். மெகா பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்துக்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார். உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் உருவாக்கப்படும் கற்பனை கதையான இப்படத்தை மெகா பட்ஜெட்டில் உருவாக்கியுள்ளனர்.
தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் உருவாகியுள்ள இதன் படப்பிடிப்பு 170 நாட்கள் நடந்துள்ளது.
பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. இது தொடர்பான டீஸரை படக்குழு வெளியிட்டுள்ளது. மிரட்டலான விஷூவலுடன் வெளியாகியுள்ள இந்த டீஸர் இணையத்தில் வைரலாகியுள்ளது.