ரவிதேஜா, பிரியா பவானி சங்கர், பேபி நட்சத்திரா, சுவாசிகா உள்பட பலர் நடித்துள்ள படம், ‘இருமுடி கட்டு’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை சிவா நிர்வானா இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இப்படம் ரூ.70 கோடிக்கும் அதிகமாக வசூலித்து ஓடிக்கொண்டிருக்கிறது.
இப்படம் பற்றி ஜி.வி.பிரகாஷ் கூறும்போது, “ஒரு படத்துக்கு இசையமைக்க அதன் கதை மிகவும் முக்கியம். ‘பொல்லாதவன்’, ‘ராஜா ராணி’ படங்களின் கதையை கேட்டபோது இது நிச்சயம் பிளாக்பஸ்டர் என தோன்றியது.
அதுபோலவே ‘இருமுடி கட்டு’ படத்தின் கதையை கேட்டபோதும் தோன்றியது. இங்கே பல ஹீரோக்கள், ரவி தேஜாவுக்கு ரசிகர்களாக உள்ளனர்.
கமர்ஷியல் படங்களில் ரவி தேஜாவுக்குத் தனித்துவம் இருக்கிறது. பல இயக்குநர்களும் அவருக்கு ரசிகர்கள். தெலுங்கில் இந்தப் படம் மிகப்பெரிய ஹிட். குழந்தை நட்சத்திரம் நட்சத்திரா இந்தப் படத்துக்காக பல விருதுகளைப் பெறுவார்” என்றார்.