தென்னிந்திய சினிமா

மாயஜால ஃபேன்டஸி கதையில் ஃபஹத் ஃபாசில்

நிலா

மாயஜால ஃபேன்​டஸி சாகச கதை​யில் ஃபஹத் ஃபாசில் நடித்​துள்ள திரைப்​படம், ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’. இதை ஷஷாங்க் யெலெட்டி இயக்​கி​யுள்​ளார். கால பைரவா இசையமைத்​துள்​ளார். ஷோயிங் பிசினஸ் நிறு​வனம் சார்​பில் எஸ்​.எஸ்​.​கார்த்​தி​கே​யா, ‘பாகுபலி’ படத்​தைத் தயாரித்த ஆர்கா மீடியா வொர்க்ஸ் நிறு​வனத்​துடன் இணைந்து இப்​படத்தை தயாரித்​துள்​ளார்.

எஸ்​.எஸ்​.​ராஜமவுலி வழங்​கும் இப்​படத்​தின் ரிலீஸ் தேதியை படக்​குழு அறி​வித்​துள்​ளது. அதன்​படி அக்​.2-ம் தேதி இப்​படம் வெளி​யாக இருக்​கிறது. “இப்​படத்​தின் ஃபேன்​டஸி கதைக்​கள​மும், அதன் தனித்​து​வ​மான பின்​னணி​யும், படத்​தின் முக்​கிய சிறப்​பம்​சங்​களாக அமை​யும்” என படக்​குழு தெரி​வித்​துள்​ளது.

SCROLL FOR NEXT