தென்னிந்திய சினிமா

‘ஐ அம் கேம்’ ட்ரெய்லர் எப்படி? - துல்கர் மீண்டும் அதிரடி ‘ஆட்டம்’!

ப்ரியா

நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில்  துல்கர் சல்மான்  நாயகனாக நடிக்கும்  ‘ஐ அம் கேம்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. 

மூன்று வருடங்களுக்கு பிறகு துல்கர் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். சூதாட்ட விளையாட்டை பின்னணியாக் கொண்ட படத்தின் ட்ரெய்லரில், மங்கிய ஒளியில் மின்னும் வண்ணங்களில் மயக்கி இழுக்கும் சூதாட்ட உலகம் விரிகிறது. பின்னணியில் சூதின் வகைகள் விவரிக்கப்படிகின்றன.

அந்த வர்ணிப்பு விளையாட்டில் நடக்கும் சூது பற்றி விளக்க, ட்ரெய்லர் அதிரடிக்கும் ஆக்‌ஷனுக்கும் மாறி  படத்தின் மீதான எதிர்பார்ப்புக்கு வித்திடுகிறது. கதையின் போக்குக்கு ஈடுகொடுத்திருப்பார் என்று துல்கரின் சண்டைக் காட்சிகள் சாட்சி சொல்கின்றன.

இந்தப் படத்தின் கதையை சஜீர் பாபா, இஸ்மாயில் அபூபக்கர், பிலால் மொய்து எழுதியிருக்கிறார்கள். வசனங்களை ஆதர்ஷ் சுகுமாறன் மற்றும் ஷஹபாஸ் ரசீத் எழுதியிருக்கிறார்கள்.

துல்​கர் சல்​மான் தனது வேஃபரர் பிலிம்ஸ் சார்​பில் தயாரிக்கும் இந்தப் ​படம் அவரின்  40-வது படமாகும்.

மலை​யாளம், தமிழ், தெலுங்கு மொழிகளி​லும் வெளியாக இருக்கும் இந்தப் படம் ஆக.20-ம் தேதி  திரைக்கு வர இருக்கிறது. 

இதில் ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், கதிர், பார்த் திவாரி, சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆக்‌ஷன் காட்சிகளை அன்பறிவ் உருவாக்க,  ஒளிப்பதிவாளராக ஜிம்ஷி காலித், இசையமைப்பாளராக ஜேக்ஸ் பிஜாய், எடிட்டராக சமன் சக்கோ ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

SCROLL FOR NEXT