தென்னிந்திய சினிமா

‘கதை கேட்கும்போது பயம் வந்தால் உடனே ஒப்புக் கொள்வேன்’ - துல்கர் சல்மான் தகவல்

நிலா

துல்​கர் சல்​மான் நடித்​துள்ள ‘ஐ அம் கேம்’ படத்தை நஹாஸ் ஹிதா​யத் இயக்​கி​யுள்​ளார். இதில் கயாது லோஹர், கதிர், ஆண்​டனி வர்​கீஸ், மிஷ்கின், சம்​யுக்தா விஸ்​வ​நாதன் உள்​ளிட்ட பலர் நடித்​துள்​ளனர். ஃபேன்​டஸி ஆக் ஷன் த்ரில்​லர் படமான இதை, துல்​கர் சல்​மானின் வேஃபரர் பிலிம்ஸ் தயாரித்​துள்​ளது. மலை​யாளம், தமிழ், தெலுங்​கு, இந்தி உள்பட 5 மொழிகளில் இப்​படம் இன்று (செப்​.3) வெளி​யாகிறது. இதன் செய்​தி​யாளர்​கள் சந்​திப்பு சென்​னை​யில் நடை​பெற்​றது.

படத்​தின் ஹீரோ துல்​கர் சல்​மான் பேசும்​போது, “இந்​தப் படத்​தில் ஏராள​மான தமிழ் நடிகர்​கள் நடித்​துள்​ள​தால் தமிழ்ப் படம் போன்ற உணர்வை ரசிகர்​களுக்கு ஏற்​படுத்​தும். எங்​கள் நிறு​வனம் மிகப்​பெரிய பட்​ஜெட்​டில் தயாரித்​துள்ள பிரம்​மாண்​ட​மான படம் இது. ஒரு கதையைக் கேட்​கும்​போது ‘இதை நாம எப்​படிப் பண்​ணப் போகிறோம்?’ என்ற பயம் வந்​தால், அந்​தப் படத்தை உடனே ஒப்​புக்​கொள்​வேன்.

இந்​தப் படத்​தில் மனதள​விலும் உடலள​விலும் கடின​மான உழைப்​பைக் கொடுத்​துள்​ளேன். இதன் படப்​பிடிப்பு நேரத்​தில் இந்த கதா​பாத்​திரத்​துக்​குத் தேவை​யான மனதைரி​யம் நம்​மிடம் இருக்​கிற​தா? என்று யோசிக்​கும் அளவுக்கு இக்​க​தா​பாத்​திரம் சவாலாக இருந்​தது. இதில் கதிரின் நடிப்பு இயல்​பாக​வும் தீவிர​மாக​வும் அமைந்​துள்​ளது. நம்​பகத்​தன்​மை​யுடன் நடித்​துள்​ளார். மிஷ்கின் இந்​தப் படத்​தின் முக்​கிய​மான அங்​கம்.

அவருடைய உற்​சாக​மும் எனர்​ஜி​யும் இன்​றைய இளம் தலை​முறை​யினரிடமே அரி​தாகத்​தான் பார்க்க முடி​யும். சம்​யுக்தா விஸ்​வ​நாதனுக்கு இந்​தப் படம் முக்​கிய​மான திருப்​பு​முனை​யாக அமை​யும். இது முழு​மை​யான கமர்​ஷியல் என்​டர்​டெய்​ன​ராக உரு​வாகி​யுள்​ளது. இதில் காமெடி, ரொமான்​ஸ், மர்​மம், சஸ்​பென்​ஸ், ஆக் ஷன், த்ரில்​லிங் மற்​றும் கேமிங் என ரசிகர்​களை கவரும் பல அம்​சங்​கள் இடம்​பெற்​றுள்​ளன” என்​றார்.

SCROLL FOR NEXT