துல்கர் சல்மான் நடிக்கும் ‘ஐ அம் கேம்’ படத்தை ‘ஆர்டிஎக்ஸ்’ நஹாஸ் ஹிதாயத் இயக்கியுள்ளார். இதில் கயாது லோஹர், ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அதிரடி த்ரில்லர் படமான இதற்கு ஜிம்ஷி காலித் ஒளிப்பதிவு செய்கிறார். ஜேக்ஸ் பிஜாய் இசை அமைக்கிறார்.
துல்கர் சல்மானின் 40-வது திரைப்படமான இதை, அவருடைய வேஃபரர் பிலிம்ஸ் மெகா பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு அதிரடி நிறைந்த, ஸ்டைலான கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் வருகிறார்.
சூதாட்டம், பழிவாங்குதல், குற்ற உலகம் மற்றும் பரபரப்பான ஆக் ஷன் காட்சிகள் நிறைந்த டிரெய்லர், கவனத்தை ஈர்த்துள்ளது. 100-க்கும் மேற்பட்ட இடங்களில் படமாக்கப்பட்டுள்ள இப்படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் ஆக.20-ல் வெளியாகவுள்ளது.