தென்னிந்திய சினிமா

துல்கரின் ‘ஏ ஒ டி’-யில் தன் கனவுக்காகப் போராடும் இளம் பெண்ணின் கதை

நிலா

துல்கர் சல்மான், சாத்விகா வீர​வல்​லி, ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முன்​னணி கதா​பாத்​திரங்​களில் நடித்​துள்ள ‘ஆகாசம்லோ ஓக தாரா’ (ஏ ஒ டி) திரைப்​படத்​தைப் பவன் சாதினேனி இயக்​கி​யுள்​ளார். தெலுங்​கில் உரு​வாகி​யுள்ள இப்​படம், தமிழ், மலை​யாளம், கன்​னடம், இந்தி மொழிகளில் வெளி​யாக இருக்​கிறது. ஜி.​வி. பிர​காஷ் குமார் இசையமைத்​துள்​ளார். சுஜித் சாரங் ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார். இப்​படம் நவ. 20-ம் தேதி தமிழ், தெலுங்​கு, இந்​தி, மலை​யாளம் ஆகிய மொழி களில் வெளி​யாக இருக்​கிறது.

இந்​நிலை​யில் இப்​படத்​தின் டீஸரை படக்​குழு வெளி​யிட்​டுள்​ளது. இதில் துல்​கர் சல்​மான், கிருஷ்ணா என்ற கதா​பாத்​திரத்​தில் நடித்​துள்​ளார். கிராமத்​தைச் சேர்ந்த ‘அமுலு’ என்ற இளம் பெண், தன் சூழ்​நிலைகளை மீறி விண்​வெளி வீராங்​க​னை​யாக மாற வேண்​டும் என்ற தனது கனவுக்​காகப் போராடு​வதை மைய​மாகக் கொண்டு இப்​படம் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது. சமூகத் தடைகளை​யும், குடும்​பத்​தின் எதிர்ப்​பை​யும் தாண்டி அவள் தன் கனவை நோக்​கிப் பயணிப்​பதே இதன் கதை. இதன் டீஸர் வரவேற்​பைப் பெற்று வரு​கிறது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT