தென்னிந்திய சினிமா

‘த்ரிஷ்யம் 4’-ம் பாகம் உருவாகுமா?

செய்திப்பிரிவு

ஜீத்து ஜோசப் இயக்​கத்​தில் மோகன்​லால், மீனா நடித்து சூப்​பர் ஹிட்​டான மலை​யாளப் படம் த்ரிஷ்யம். க்ரைம் த்ரில்​லர் படமான இதன் இரண்டு பாகங்​களும் வரவேற்பைப் பெற்ற நிலை​யில் இதன் 3-ம் பாகம் உருவாகி​யுள்ளது. இது ஏப்​ரல் 2-ம் தேதி வெளி​யாக இருக்கிறது.

இப்​படத்​துக்கு ரசிகர்​களிடம் எதிர்​பார்ப்பு உள்​ளது. இந்த நிலை​யில், இயக்​குநர் ஜீத்து ஜோசப்​பிடம், ‘த்​ரிஷ்​யம் 4-ம் பாகம் உரு​வாக வாய்ப் பிருக்​கிற​தா?’ எனக் கேட்கப்பட்டது. அதற்​கு, “த்​ரிஷ்​யம் கதையை இதற்கு மேல் கொண்டு சென்​றால் சுவாரஸ்​யம் இருக்​காது. அதனால், 3-ம் பாகத்​துடன் இது நிறைவடைகிறது. கதையை நீட்டிக்கும்​ விருப்​ப​மும்​ இல்​லை” எனத்​ தெரி​வித்​துள்ளார்.

          
SCROLL FOR NEXT