தென்னிந்திய சினிமா

மருத்துவமனை​யில் டிஸ்கோ சாந்தி அனு​மதி

நிலா

தமிழ், தெலுங்​கு, கன்​னடம், மலை​யாளம், இந்தி என பல்​வேறு மொழிகளில் கவர்ச்சி பாடலுக்கு நடன​மாடிய​வர் டிஸ்கோ சாந்தி. 1980 மற்​றும் 90-களில் பிரபல​மாக இருந்த இவர், தெலுங்கு நடிகர் ஸ்ரீஹரியை காதலித்​துத் திரு​மணம் செய்​து​கொண்​டார். இவர்களுக்கு 2 மகன்​கள் உள்​ளனர். 1997-ம் ஆண்டு சினி​மா​வில் இருந்து ஒதுங்​கிய டிஸ்கோ சாந்​தி, ஹைத​ரா​பாத்​தில் வசித்து வருகிறார்.

இந்​நிலை​யில் மருத்​து​வ​மனை​யில் இருப்​பது போன்ற புகைப்படத்தை அவர் பகிர்ந்​திருந்​தது பரபரப்பை ஏற்​படுத்​தி​யது.

இதுபற்றி அவரிடம் கேட்​ட​போது, “என் அம்​மா​வின் தோழி சமீபத்தில் கால​மா​னார். இதற்​காகச் சென்னை வந்​து​விட்டு மாலையே ஹைத​ரா​பாத் திரும்​பினேன். வந்​ததும் உடன் நிலை மோச​மாகி​விட்​டது. மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டு 10 நாட்​கள் இருந்​தேன். அங்கு இருக்க முடி​யாத​தால் வீட்​டுக்கு வந்​து​விட்​டேன். வீட்​டில் செவிலியர் ஒரு​வரை வைத்து பார்த்​துக் கொள்கிறேன். இப்​போது என் உடல் நிலை தேறி வரு​கிறது” என்றார்.

SCROLL FOR NEXT