நடிகர் விஜய் தேவரகொண்டா

 
தென்னிந்திய சினிமா

6 கேர​வன்​கள், 50 உதவியாளர்கள் கேட்​டாரா விஜய் தேவர​கொண்​டா?

நிலா

விஜய் தேவர​கொண்​டா, ராஷ்மிகா மந்​தனா நடிக்​கும் படம் ‘ரணபாலி’. இதை ராகுல் சங்​கிருத்​யன் இயக்​கு​கிறார். இதில் ‘மம்மி’ மூலம் பிரபல​மான அர்​னால்ட் வோஸ்​லூ, சர் தியோடோர் ஹெக்​டர் என்ற பிரிட்​டிஷ் அதி​காரி​யாக நடிக்​கிறார்.

நீரவ் ஷா ஒளிப்​ ப​திவு செய்​யும் இப்​படத்​துக்கு அஜய்​– அதுல் இசை அமைக்​கிறார். பிரம்​மாண்ட பட்​ஜெட்​டில் பான் இந்​தியா படமாக உரு​வாகும் இதன் படப்​பிடிப்பு நடை​பெற்று வரு​கிறது.

இதன் படப்​பிடிப்​பில் தனக்கு 6 கேர​வன்​கள் மற்​றும் 50 உதவியாளர்​கள் வேண்​டும் என்று விஜய தேவர​கொண்டா கேட்டதாக​வும் அவரின் இக்​கோரிக்​கைகளால் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்​ஸ், தயாரிப்​பாளர்​கள் சங்கத்தை அணுகிய​தாக​வும் செய்தி​கள் பரவின.

இதற்​குப் பதிலளித்த விஜய தேவர​கொண்டா தரப்​பு, “இது முற்றிலும் பொய்​யான, ஆதா​ரமற்ற தகவல். தயாரிப்பாளர்களுடனும், தயாரிப்பு குழு​வுட​னும் எந்​தப் பிரச்சினை​யும் எங்​களுக்கு இல்​லை. இது​போன்ற வதந்​தி​களைப் பரப்ப வேண்​டாம்” என்று தெரி​வித்​துள்​ளது.

SCROLL FOR NEXT