சிரஞ்சீவி நடித்து வெளியாகியுள்ள புதிய படத்தின் குழுவினர் எடுத்துள்ள முடிவு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
அனில் ரவிபுடி இயக்கத்தில் சிரஞ்சீவி நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘மனசங்கர வரபிரசாத் காரு’. இப்படத்துக்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்துள்ளது. இதனால் வரும் நாட்களில் வசூல் சாதனை படைக்கும் என்பது உறுதியாகியுள்ளது. இதனிடையே படக்குழுவினர் எடுத்துள்ள புதிய முடிவு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
டிஜிட்டல் யுகத்தில் படத்தின் மீது வரும் எதிர்மறை விமர்சனங்கள் உள்ளிட்டவற்றை தவிர்க்க நடவடிக்கை எடுத்திருக்கிறது. படத்துக்கான ரேட்டிங், விமர்சனங்கள் உள்ளிட்டவை சட்டப்பூர்வமாக கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. டிக்கெட் முன்பதிவு தளங்களில் யாருமே கருத்துகள், ஸ்டார்கள் உள்ளிட்டவை கொடுக்காதவாறு நீதிமன்றம் மூலம் தடை உத்தரவினை வாங்கியிருக்கிறது படக்குழு. இதனால் படத்திற்கான எதிர்மறை கருத்துகள் உள்ளிட்டவை பெருமளவு குறைய வாய்ப்பு இருக்கிறது.
இந்த முடிவினை விஜய் தேவரகொண்டா உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் வரவேற்று இருக்கிறார்கள். இதன் மூலம் இதர நடிகர்களின் ரசிகர்கள் மேற்கொள்ளும் எதிர்மறை போக்கு குறைய வாய்ப்பு இருக்கிறது. இதுவொரு முன்னுதாரணமாக பார்க்கப்படுகிறது. இதனை அடுத்டுத்து வரும் பெரிய நடிகர்களின் படங்களுக்கும் பின்பற்ற வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.