தென்னிந்திய சினிமா

‘கேரளா ஸ்டோரி’ சுதிப்டோ சென் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் மறுப்பு

ப்ரியா

சுதிப்டோ சென் இயக்கத்தில் கடந்த 2023-ம் ஆண்டு வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய படம், ‘த கேரளா ஸ்டோரி’. கேரளாவில் 32 ஆயிரம் இந்துப் பெண்களை மதமாற்றம் செய்து, தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபடுத்தியதாக அந்தப் படத்தில் காட்சிகள் இடம்பெற்றன. அதில் அடா சர்மா, சித்தி இட்னானி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இந்தப் படத்துக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. சில மாநிலங்களில் இந்தப் படம் தடை செய்யப்பட்டன. இந்நிலையில் இதன் இயக்குநர் சுதிப்டோ சென் ‘சரக்’ என்ற படத்தை தயாரித்துள்ளார். இதை ஷீலாதித்ய மவுலிக் இயக்கியுள்ளார்.

          

இப்படம் குறிப்பிட்ட இந்து வழிபாட்டு குழுக்களுக்குள் உள்ள அமானுஷ்ய நடைமுறைகளை பற்றி எடுக்கப்பட்டுள்ளது. அதில் நரமாமிச விஷயங்களும் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில் இப்படத்துக்கு தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்க மறுத்துள்ளது.

இதுபற்றி சுதிப்டோ சென் கூறும்போது, “என் படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படாததற்கான காரணம் தெரியவில்லை. இது கற்பனையான படம் அல்ல. ஆவணப்படுத்தப்பட்ட விஷயங்களையே படமாக்கி இருக்கிறோம். சில வெட்டுக்களை, சில காட்சிகளை நீக்க தயாராக இருக்கிறேன். ஆனால் சான்றிதழ் தராததற்கான காரணம் தெரியவில்லை. உண்மை எப்போதும் கசப்பாகவே இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT