தென்னிந்திய சினிமா

வசூலில் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ புதிய மைல்கல்!

நிலா

நிவின் பாலி - மமிதா பைஜு முதன்மை பாத்​திரங்​களில் நடித்​துள்ள மலை​யாளத் திரைப்​படம், ‘பெத்​ல​கேம் குடும்ப யூனிட்’. இதில் சங்​கீத் பிர​தாப், சுரேஷ் கிருஷ்ணா, வினய் ஃபோர்ட், ரோஷன், ஷ்யாம் மோகன் உள்​ளிட்ட பலர் நடித்​துள்​ளனர். விஷ்ணு விஜய் இசையமைத்​துள்ள இப்​படத்​துக்கு அஜ்மல் சாபு ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார். கிரிஷ் ஏ.டி இயக்​கி​யுள்ள இப்​படத்தை திலீஷ் போத்​தன், ஃபஹத் பாசில், ஷ்யாம் புஷ்கரன் இணைந்து தயாரித்​துள்​ளனர்.

இப்​படம் மொழி​மாற்​றம் செய்​யப்​பட்டு தமிழிலும் வெளி​யானது. இந்​நிலை​யில் இந்​தப் படம் மலை​யாளத்​தில் ரூ.300 கோடிக்​கும் அதி​க​மாக வசூலித்து ஓடிக் கொண்​டிருக்​கிறது. இதன் மூலம் ரூ.300 கோடியை வேக​மாக வசூலித்த மலை​யாளத் திரைப்​படம் என்ற புதிய மைல்கல்லை ‘பெத்​ல​கேம் குடும்ப யூனிட்’ படைத்​துள்​ளது.

இந்​தப் படம் வெளி​யாகி 28-வது நாளி​லும், கேரளா​வில் 266 திரையரங்​கு​களில் அரங்கு நிறைந்த காட்​சிகளு​டன் ஓடிக்​கொண்​டிருக்​கிறது. அதி​கம் வசூல் செய்த மலை​யாள திரைப்​பட​மான ‘லோகா சாப்​டர் 1-சந்​தி​ரா’ ரூ. 300 கோடி வசூலை ஈட்ட 45 நாட்​கள் எடுத்த நிலை​யில், ‘பெத்​ல​கேம் குடும்ப யூனிட்’ 24 நாட்​களி​லேயே அந்த இலக்கை எட்​டி​யுள்​ளது குறிப்​பிடத்​தக்​கது. இப்​படம் இன்​னும் அதிக வசூலை ஈட்​டும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

SCROLL FOR NEXT