தென்னிந்திய சினிமா

அல்லு அர்​ஜுனை இயக்குவதை உறுதி செய்தாரா பசில் ஜோசப்?

நிலா

நடிகர் அல்லு அர்​ஜுன் இப்​போது அட்லி இயக்​கும் ‘ராக்​கா’ என்ற சயின்ஸ் பிக்​சன் படத்​தில் நடித்து வரு​கிறார்.

சன் பிக்​சர்ஸ் தயாரிக்​கும் இந்​தப் படத்தை அடுத்து அவர் லோகேஷ் கனக​ராஜ் இயக்​கும் படத்​தில் நடிக்​கிறார். அதற்​கான லுக் டெஸ்ட் சமீபத்​தில் நடை​பெற்று முடிந்​தது. இதையடுத்து மலை​யாள நடிகரும் இயக்​குநரு​மான பசில் ஜோசப் இயக்​கும் படத்​தில் அவர் நடிக்க இருப்​ப​தாகச் செய்​தி​கள் வெளி​யாகி வந்தன.

இந்​நிலை​யில் பசில் ஜோசப் தனது இன்​ஸ்டா ஸ்டோரி​யில் ‘ஐகான்’ என்று எழுதப்​பட்ட தொப்​பியைப் பகிர்ந்​து, அல்லு அர்​ஜுனின் ‘ஆர்யா 2’ படத்​தின் பிரபல​மான பாடல் ஒன்​றை​யும் இணைத்​திருந்​தார். இதன் மூலம், அல்லு அர்​ஜுனுடன் அவர் இணை​ய இருப்​பதை மறை​முக​மாக உணர்த்​தி​யுள்​ள​தாக​வும் இது அவரின் 24-வது படம் என்​றும் ரசிகர்​கள் கூறி வரு​கின்​றனர். இதை அதி​காரப்​பூர்​வ​மாக யாரும் உறு​திப்​படுத்​த​வில்​லை.

SCROLL FOR NEXT