அட்லி இயக்கும் சயின்ஸ் பிக் ஷன் படத்தில் நடித்து வருகிறார் அல்லு அர்ஜுன். இதில் தீபிகா படுகோன் நாயகியாக நடிக்கிறார். ராஷ்மிகா உள்பட மேலும் சில நடிகைகள் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் அவர் நடிக்க இருக்கிறார். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு ஜுன் அல்லது ஜுலை மாதம் தொடங்கும் என தெரிகிறது. இப்படம் தொடர்பாகப் படக்குழு வெளியிட்ட அறிமுக வீடியோ வைரலானது. அனிருத் இசை அமைக்கிறார்.
இதையடுத்து அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடிக்கும் படத்தை மலையாள பட இயக்குநரும் நடிகருமான பசில் ஜோசப் இயக்க இருக்கிறார். இது அல்லு அர்ஜுனின் 25 வது படம். இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.