தென்னிந்திய சினிமா

மீண்டும் பாடகராக களமிறங்கும் பாலையா

ஸ்டார்க்கர்

கோபிசந்த் மாலினேனி படத்துக்காக பாடல் ஒன்றை பாடவுள்ளார் பாலையா.

போயபத்தி சீனு இயக்கத்தில் பாலையா நடிப்பில் வெளியான படம் ‘அகண்டா 2’. இப்படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. மாறாக இணையத்தில் பலருடைய கிண்டலுக்கும் ஆளானது. இப்படத்தினைத் தொடர்ந்து கோபிசந்த் மாலினேனி இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார் பாலையா.

பாலையா – கோபிசந்த் மாலினேனி கூட்டணி இதற்கு முன்பாக ‘வீரசிம்ஹா ரெட்டி’ படத்தில் இணைந்து பணிபுரிந்துள்ளது. தற்போது இந்தக் கூட்டணி முழுக்க வரலாற்று பின்னணிக் கொண்ட படத்தில் பணிபுரியவுள்ளனர். இதில் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் பாலையா. நாயகியாக நயன்தாரா, இசையமைப்பாளராக தமன் ஆகியோர் ஒப்பந்தமாகி இருக்கிறார்கள்.

’என்.பி.கே 111’ என அழைக்கப்பட்டு வரும் இப்படத்தில் பாடலொன்றை பாடவுள்ளார் பாலையா. இதற்கு முன்பாக பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் வெளியான ‘பைசா வசூல்’ படத்தில் ஒரு பாடலை பாலையா பாடியிருப்பது நினைவுக் கூரத்தக்கது. அப்பாடலுக்கு பின்பு இப்போது தான் கோபிசந்த் மாலினேனி படத்துக்காக பாடகராகவும் களமிறங்கவுள்ளார் பாலையா.

SCROLL FOR NEXT