தென்னிந்திய சினிமா

‘ராக்கா’ அப்டேட்: அட்லியின் புதிய திட்டம்

ஸ்டார்க்கர்

‘ராக்கா’ படத்தின் தீபிகா படுகோன் காட்சிகளுக்காக அட்லி புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளார்.

அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வரும் படம் ‘ராக்கா’. சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் தீபிகா படுகோன். சில தினங்களுக்கு முன்பு இரண்டாவது முறையாக கர்ப்பமாகி இருப்பதை தீபிகா படுகோன் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் உறுதிப்படுத்தினார். இதனால், ‘ராக்கா’ படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகின.

ஆனால், தீபிகா படுகோன் இடம்பெறும் காட்சிகளை எந்தவித மாற்றமும் இல்லாமல் புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளார். என்னவென்றால், தீபிகா படுகோனின் டூப்பை வைத்து சண்டைக் காட்சிகள் அனைத்தையும் படமாக்கிவிட முடிவு செய்திருக்கிறார். இதுவரை படமாக்கி வைக்கப்பட்டுள்ள க்ளோஸ் அப் காட்சிகளை வைத்து, சண்டைக் காட்சிகளை தீபிகா படுகோன் மாதிரி மாற்றிவிடலாம் என முடிவு செய்திருக்கிறார்.

மேலும், இன்னும் தீபிகா படுகோனுக்கு 50 நாட்கள் படப்பிடிப்பு இருக்கிறது. அல்லு அர்ஜுன் உடன் அவர் இடம்பெறும் காட்சிகளை எல்லாம் எந்தவித சிரமமும் இடம்பெறாத வகையில் காட்சிப்படுத்திவிடவும் திட்டமிட்டு உள்ளதாக உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், ‘ராக்கா’ படத்திலிருந்து தீபிகா படுகோனை நீக்கும் எண்ணத்தில் படக்குழுவினர் இல்லை என்பது தெளிவாகிறது.

SCROLL FOR NEXT