தென்னிந்திய சினிமா

அனில் ரவிப்புடியின் அடுத்த படம் அறிவிப்பு

ஸ்டார்க்கர்

அனில் ரவிப்புடியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

‘சங்கராந்திக்கி வஸ்துணாம்’ மற்றும் ’மனசங்கர வரபிரசாத் காரு’ ஆகிய படங்களின் பிரம்மாண்ட வெற்றியால், முன்னணி இயக்குநராக வலம் வருகிறார் அனில் ரவிப்புடி. அவருடைய அடுத்த படத்தினை தயாரிக்க பல்வேறு தயாரிப்பாளர்கள் போட்டியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். தற்போது தயாரிப்பாளர் குறித்த அறிவிப்பு இல்லாமல், நாயகர்கள் குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார் அனில் ரவிப்புடி.

          

தனது அடுத்த படத்திலும் வெங்கடேஷை இயக்கவுள்ளார் அனில் ரவிப்புடி. அவருடன் இணைந்து நந்தாமுரி கல்யாண்ராமும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இவர்களுடன் வேறு யாரெல்லாம் நடிக்கவுள்ளார்கள், யார் தயாரிப்பாளர் உள்ளிட்ட விவரம் எதுவுமே இன்னும் முடிவாகவில்லை.

இப்படத்தில் பல்வேறு முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் கவுரவ கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இதனை இயக்குநர் அனில் ரவிப்புடி இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

SCROLL FOR NEXT