அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடிக்கும் சயின்ஸ் பிக் ஷன் படம் ‘ராக்கா’. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் கதை, 2 வெவ்வேறு உலகங்களிலும் காலகட்டங்களிலும் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. தீபிகா படுகோன் நாயகியாக நடிக்கிறார். ஜான்வி கபூர், மிருணாள் தாக்குர், ராஷ்மிகா மந்தனா உள்பட பலர் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
இப்படத்துக்காக ஒரே நேரத்தில் 37 நபர்களைக் கொண்டு நிகழ்நேர மோஷன் - கேப்சர் தொழில்நுட்பம் மூலம் காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வழக்கமாக மோஷன் - கேப்சர் தொழில்நுட்பத்தில் சில நபர்களை மட்டுமே வைத்து ஒரே நேரத்தில் படம் பிடித்துள்ள நிலையில் ‘ராக்கா’ படத்தில் 37 பேரை ஒரே நேரத்தில் இத்தொழில்நுட்பத்தில் படம் பிடித்திருப்பது உலக திரைப்பட வரலாற்றில் சாதனையாகப் பார்க்கப்படுகிறது.
இந்த சாதனை முயற்சிக்காக, 92 ஆப்டிகல் மோஷன்-கேப்சர் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த கின்னஸ் சாதனைக்கான அதிகாரப்பூர்வ சான்றிதழை அல்லு அர்ஜுன் மற்றும் இயக்குநர் அட்லி இணைந்து பெற்றுக் கொண்டனர்.