தென்னிந்திய சினிமா

‘அகண்டா 2’ ரிலீஸ் திடீர் நிறுத்தம் ஏன்?

செய்திப்பிரிவு

தெலுங்கு சினி​மா​வின் பிரபல மாஸ் ஹீரோ பால​கிருஷ்ணா, 2 கதா​பாத்​திரங்​களில் நடித்​துள்ள படம், ‘அகண்டா 2’. போயபதி ஸ்ரீனு இயக்​கி​யுள்ள இந்​தப் படத்​தில் சம்​யுக்​தா, பிரக்யா ஜெய்​ஸ்​வால் உள்​ளிட்ட பலர் நடித்​துள்​ளனர். தமன் இசையமைத்​துள்​ளார். ரசிகர்​களிடையே எதிர்​பார்ப்பை ஏற்​படுத்​திய இந்​தப் படம் நேற்று வெளி​யாகும் என அறிவிக்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில் நேற்​று​முன் தினம் நடக்க இருந்த ப்ரீமியர் காட்​சிகள் ரத்து செய்​யப்​பட்​டன. இதைத் தொடர்ந்து நேற்று வெளி​யா​காது என அறிவிக்​கப்​பட்​டது. இது தொடர்​பாக அப்​படத்​தின் தயாரிப்பு நிறு​வனம் வெளி​யிட்ட அறிக்​கை​யில், “தவிர்க்க முடி​யாத காரணத்​தால் திட்​ட​மிட்​டபடி ‘அகண்டா 2’ வெளி​யா​காது என்​பதை கனத்த இதயத்​துடன் தெரி​வித்​துக் கொள்​கிறோம்.

இது எங்​களுக்கு வலி மிகுந்த தருணம். படத்தை எதிர்​பார்த்​துக் காத்​திருந்த ரசிகர்​களுக்கு இந்த அறி​விப்பு எப்​படி​யான ஏமாற்​றத்​தைக் கொடுக்​கும் என்​ப​தைப் புரிந்து கொள்ள முடிகிறது. பிரச்​சினையைச் சரி செய்ய அயராது உழைத்து வரு​கிறோம். சிரமத்​துக்கு வருந்​துகிறோம்” என்று தெரி​வித்​துள்​ளது. இதனால் ரசிகர்​கள் ஏமாற்​றம் அடைந்​தனர்.

இந்​தப் படத்​தைத் தயாரித்த 14 ரீல்ஸ் பிளஸ் நிறு​வனம் சில வருடங்களுக்கு முன் தயாரித்த படங்​கள்மூலம் ஈராஸ் இண்​டர்​நேஷனல் நிறு​வனத்​துக்கு ரூ.28 கோடியைச் செலுத்த வேண்​டி​யுள்​ளது. அதைக் கொடுத்​து​விட்​டுப் படத்தை வெளி​யிட வேண்​டும் என்று சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் ஈராஸ் தொடுத்த வழக்​கில் படத்​துக்கு இடைக்​கால தடை​வி​திக்​கப்​பட்​டது. இதனால் ‘அகண்டா 2’ ரிலீஸ் நிறுத்​தப்​பட்​டுள்ளது. இதற்​கிடையே படத்​தின் ஹீரோ பால​கிருஷ்ணா தனக்​குத் தயாரிப் பாளர் கொடுக்க வேண்​டிய பாக்கி தொகை​யாக ரூ.7 கோடியை​யும் இயக்​குநர்போயபதி ரூ.4 கோடியை​யும் விட்​டுக் கொடுத்​திருப்பதாக​வும் கூறப்​படு​கிறது.

SCROLL FOR NEXT