நடிகை தமன்னா

 
தென்னிந்திய சினிமா

“தென்னிந்திய சினிமாவில் ஆணாதிக்க மனப்பான்மை” - நடிகை தமன்னா கருத்து

நிலா

தமிழ், தெலுங்​கு, இந்​தி​யில் நடித்து வரும் நடிகை தமன்​னா, சமீபத்தில் அளித்​துள்ள பேட்​டி​யில், தென்​னிந்​திய திரைத்​துறையில் தனக்கு ஏற்​பட்ட அனுபவங்​கள் குறித்​துப் பேசியிருக்கிறார்.

அவர் கூறும்​போது,"தென்​னிந்​திய சினி​மா​வில் பெண்​களைப் பார்க்​கும் பார்​வை​யில் ஆணா​திக்க மனப் ​பான்மை இருப்​பதை உணர்ந்​தேன். அந்​தப் பார்வை பெண்​களைப் பாராட்​டும் வகையில் இல்​லை. அங்கு வணிக ரீதி​யாக வெற்றி பெற வேண்டுமென்​றால் குறிப்​பிட்ட ‘ஸ்​டார்’ அந்​தஸ்து அவசி​யம். அந்த வகை​யில் அங்கு பாலிவுட்​டை ​விட அதி​க​மான கட்​டுப்​பாடு​கள் இருக்​கின்​றன.

கவர்ச்​சி​யை​யும், நடிப்​புத் திறனை​யும் சமநிலைப் படுத்​தும் நடிகைகளே அங்கு நீண்ட காலம் வெற்​றிகர​மாக நிலைத்​திருக்க முடி​யும். இந்தி திரைத்​துறை​யில் 2 வகை​யான நடிகைகள் உள்ளனர். கலைநயமிக்க அணுகு ​முறையைக் கொண்​ட​வர்​கள் குறிப்பிட்ட சில கதா​பாத்​திரங்​களில் நடிக்​கவே அதி​கம் பொருந்துகிறார்​கள்; அவர்​கள் கட்​டா​யம் கவர்ச்சி பாடல்​- நடனக் காட்​சிகளில் நடிக்க வேண்​டிய அவசி​யமில்​லை. இதில் இருந்து மாறுபட்டவர்கள் மற்றொரு வகையினர்.

இவ்​விரண்​டில் எதை வேண்​டு​மா​னாலும் தேர்ந்​தெடுக்​கும் வாய்ப்பை வழங்​கு​கிறது; ஆனால், இந்த இரண்​டை​யும் சிறப்பாகச் செய்​பவர்​கள் தவிர்க்க முடி​யாமல் சூப்​பர் ஸ்டார்களாக உயர்​கிறார்​கள். நடனப் பாடல்​களை ‘ஐட்​டம் பாடல்கள்’ என்று அழைப்பதை விரும்​ப​வில்​லை. அந்​த வார்த்​தை பெண்​களை ஒரு பொருளாகக்​ காட்​டு​வ​தால்​, ‘பார்ட்​டி பாடல்​கள்​’ என்று அழைப்​ ப​தையே விரும்​பு​கிறேன்​. இவ்​வாறு தமன்​னா தெரிவித்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT