நடிகை​ சுவாசிகா

 
தென்னிந்திய சினிமா

மலை​யாள சினிமாவில் வாய்ப்புகள் வராதது ஏன்? - சுவாசிகா விளக்கம்

நிலா

மலை​யாள நடிகை​யான சுவாசிகா, தமிழ், தெலுங்கு படங்களிலும் நடித்து வரு​கிறார். தமி​ழில், லப்​பர் பந்து, மாமன், நூறு சாமி உள்ளிட்ட படங்​களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய அவர், தெலுங்​கில் இரு​முடி படத்​தில் நெகட்​டிவ் கதாபாத்​திரத்​தில் நடித்​திருந்​தார். சமீபத்​தில் வெளியான ‘ஆகாசம்லோ ஒக தாரா’ படத்​தில் துல்​கர் சல்​மானுக்கு சகோதரியாக நடித்​திருந்​தார்.

இந்​நிலை​யில் அவர் அளித்த பேட்​டி​யில் கூறும்​போது, “கதை கேட்கும்​போது, எனக்கு ஆர்​வத்​தைத் தூண்​டும் கதாபாத்திரங்களையே தேர்ந்​தெடுப்​பேன். நெகட்​டிவ், பாசிட்​டிவ் கதாபாத்​திரமா, முழுநீள வேடமா என்று பார்ப்​ப​தில்லை. அந்​தக் கதாபாத்​திரத்​துடன் என்​னால் எளி​தில் பொருந்​திப் போக முடிகிறதா என்றே பார்ப்​பேன். கிடைக்​கும் கதாபாத்​திரத்​தில் நம்முடைய பாணி​யில் நடித்து வெளிப்​படுத்த ஒரே ஒரு காட்சி இருந்​தா​லும் ​கூட அந்​தப் படத்​தைத் தேர்ந்​தெடுப்​பேன்.

மலை​யாள சினிமாவில் உங்​களைப் பார்க்க முடிய​வில்லையே என்று அடிக்​கடி கேட்​கிறார்​கள். அதற்​கான பதில் என்​னிடம் இல்லை. நான் ஒருபோதும் மலை​யாள சினிமாவில் பணி​யாற்ற மாட்​டேன் என்றோ, தமிழ், தெலுங்​குப் படங்​கள் எனக்கு முக்​கியம் என்றோ எங்​கும் சொன்​னதில்லை. எனக்கு வாய்ப்​பு​கள் கிடைக்காததற்​குக் காரணம், மலை​யாள சினிமாவுக்கு என் தேவை இல்லை என்​ப​து​தான். அது​தான் நேர்​மையான உண்மை. நான் நடித்த கதாபாத்​திரங்​களைப் பற்றி திரைத்​துறை​யில் உள்ளவர்​கள் நல்ல விஷயங்​களையே கூறியுள்​ளனர். ஆனால் அவர்​களால் எனக்கு ஏன் வாய்ப்​பு​கள் வழங்க முடிய​வில்லை என்பது அவர்​களுக்கு மட்​டுமே தெரியும்” என்று சுவாசிகா கூறினார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT