நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி

 
தென்னிந்திய சினிமா

ரூ.8 கோடி சம்​பளம் கேட்டேனா? - ஸ்ரீநிதி ஷெட்டி மறுப்பு

நிலா

‘கே.ஜி.எஃப்’ திரைப்​படங்​கள் மூலம் பிரபல​மானவர் ஸ்ரீநிதி ஷெட்​டி. தமிழில் விக்​ரமின் ‘கோப்​ரா’ படத்​தில் நடித்​திருந்த இவர், இப்போது வெங்​கடேஷின் ‘ஆதர்ஷ குடும்​பம்’ என்ற தெலுங்கு படத்​தில் இரு குழந்​தைகளுக்​குத் தாயாக நடித்​துள்​ளார். அவர் அளித்​துள்ள பேட்​டி​யில், ரூ.8 கோடி சம்​பளம் கேட்​ட​தாக வந்த தகவலை மறுத்​துள்​ளார்.

இதுபற்றி அவர் கூறும்​போது, “கே.ஜி.எஃப் படங்​களின் வெற்றிக்குப் பிறகு ரூ.7 முதல் ரூ.8 கோடி வரை, நான் சம்​பளம் கேட்​ப​தாகச் சொல்​கிறார்​கள். நான் இது​வரை நடித்த திரைப்​படங்களே மிகக் குறைவு. அப்​படி​யிருக்​கும் போது அவ்​வளவு பெரிய தொகையை எப்​படி சம்​பள​மாகக் கேட்க முடி​யும்? அதனால் அது வதந்​தி​தான். ‘கேஜிஎஃப்’ படங்​களுக்​குப் பிறகு அவசரப்​பட்​டுத் திரைப்​படங்​களை ஒப்​புக் கொள்​ள​வில்​லை.

பணம் சம்​பா​திப்​பது மட்​டுமே எனக்கு நோக்​க​மாக இருந்திருந்தால், கடந்த சில ஆண்​டு​களில் 30 முதல் 40 திரைப்​படங்​களில் நடித்​திருக்க முடி​யும். ஆனால், வெறும் பணத்துக்காகப் படங்​களை ஒப்​புக்​கொள்​ளாமல், நல்ல கதைக்கும் தரமான கதா​பாத்​திரங்​களுக்​கும் மட்​டுமே முன்னுரிமை அளிக்​கிறேன்” என்று குறிப்​பிட்​டுள்​ளார்.

SCROLL FOR NEXT