நடிகை ஸ்வேதா மேனன்
மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’வின் பொதுக் குழுக் கூட்டத்தில் ஏற்பட்ட பிரச்சினையை அடுத்து, அதன் தலைவர் ஸ்வேதா மேனன் உள்பட 17 நிர்வாகிகளும் ராஜினாமா செய்தனர்.
இது மலையாள திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ராஜினாமா செய்தது ஏன் என்பது குறித்து சமூக வலைதளப் பக்கத்தில் ஸ்வேதா மேனன் கூறியுள்ளார். அதில், “பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவுடன் வெற்றி பெற்றேன். என்னால் முடிந்த அளவுக்கு நேர்மையாகச் செயல்பட்டேன்.
முந்தைய நிர்வாகக் குழுவின் செயல்பாடுகளை விசாரிக்கும் வாய்ப்பு எங்களுக்கு வழங்கப்படவில்லை. கடந்த 2 நிர்வாகங்களின் கணக்குகளும் முழுமையாக ஆய்வு செய்யப்பட வேண்டும். நான் எந்த அரசியல் கட்சியையும் சேர்ந்தவள் அல்ல.
தனிப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து சந்தித்ததால், கொள்கை உறுதியுள்ள பெண்ணாக ‘அம்மா’வில் இருந்து விலக முடிவு செய்தேன். அது பலவீனத்தால் அல்ல; என் சுய மரியாதையால் தான்” என்று தெரிவித்துள்ளார்.