தென்னிந்திய சினிமா

நடிகை சுபா பூஞ்சா விவாகரத்துக் கோரி மனு

நிலா

தமிழில் மச்சி, திருடிய இதயத்தை, ஒரு பொண்ணு ஒரு பையன், சுட்டப்பழம் உள்பட சில படங்களில் நடித்திருப்பவர் கன்னட நடிகை சுபா பூஞ்சா. கன்னட பிக் பாஸ் முன்னாள் போட்டியாளருமான இவர், தனது காதலர் சுமந்த் பில்லவா என்பவரைக் கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

மங்களூரு அருகே குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் எளிமையாக நடைபெற்றது. இந்நிலையில் 4 வருடங்களிலேயே இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து, பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தை நாடியுள்ளனர். நடிகை சுபா பூஞ்சா திடீரென விவாகரத்து கோரி மனுத் தாக்கல் செய்திருப்பது கன்னட திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT