தென்னிந்திய சினிமா

நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கு: திலீப் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல் முறையீடு

செய்திப்பிரிவு

பிரபல மலை​யாள நடிகை ஒரு​வர் கடந்த 2017-ம் ஆண்டு காரில் கடத்​தப்​பட்டு பாலியல் துன்​புறுத்​தலுக்கு உள்​ளாக்​கப்​பட்​டார்.

இது தொடர்​பாக வழக்​குப் பதிவு செய்த கொச்சி போலீ​ஸார், பாதிக்​கப்​பட்ட நடிகை​யின் முன்​னாள் கார் ஓட்​டுநர் பல்​சர் சுனில் உட்பட 7 பேரை கைது செய்​தனர். இவர்​களிடம் நடத்​திய விசாரணை​யில் இச்​சம்​பவத்​துக்​குச் சதித்​திட்​டம் தீட்​டிய​தாகப் பிரபல மலை​யாள நடிகர் திலீப் கைது செய்​யப்​பட்​டார். இந்த வழக்கு விசா​ரணை எர்​ணாகுளம் மாவட்ட நீதி​மன்​றத்​தில் நடைபெற்​றது.

எட்டு ஆண்​டு​கள் நீடித்த விசா​ரணைக்​குப் பிறகு, டிச. 8-ம் தேதி எர்​ணாகுளம் முதன்மை அமர்வு நீதிபதி ஹனி எம். வர்​கீஸ், ஒன்று முதல் ஆறு வரையி​லான குற்​றம்​சாட்​டப்​பட்​ட​வர்​களைக் குற்றவாளி​கள் என அறி​வித்தார் நீதிப​தி, 8-வது குற்​ற​வாளி​யாகச் சேர்க்​கப்​பட்ட நடிகர் திலீப்பை விடு​வித்​தார். பின்​னர் டிச.12ம் தேதி இவ்​வழக்​கில் தீர்ப்பு வழங்​கப்​பட்​டது.

அந்த 6 பேருக்​கும் 20 ஆண்​டு​கள் கடுங்​காவல் தண்​டனை விதிக்கப்​பட்​டது. இந்த தீர்ப்​புக்கு எதி​ராகப் பாதிக்​கப்​பட்ட நடிகை தனது ஏமாற்​றத்​தைத் தெரி​வித்​திருந்​தார். இத்​தீர்ப்பை எதிர்த்து மேல் முறை​யீடு செய்ய இருப்​ப​தாக அரசு தரப்​பில் தெரிவிக்கப்பட்டு இருந்​தது.

இந்​நிலை​யில் இது தொடர்பாக சிறப்பு வழக்கறிஞர் வி.அஜய்குமார் அளித்த சட்ட ஆலோசனையின் அடிப்படையில், மேல் முறையீடு செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது. கேரள உயர் நீதிமன்றத்தின் கிறிஸ்துமஸ் விடுமுறை முடிந்ததும் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட இருக்கிறது.

SCROLL FOR NEXT