தென்னிந்திய சினிமா

நடிப்​புக்கு மீண்​டும் திரும்​பிய சமீரா ரெட்டி

நிலா

தமிழில் வாரணம் ஆயிரம், வெடி, வேட்டை உள்பட சில படங்களில் நடித்​திருப்​பவர், இந்தி நடிகை​யான சமீரா ரெட்​டி. தெலுங்​கு படங்​களி​லும் நடித்​துள்ள இவர், 2013ம் ஆண்டு கன்னடப் படம் ஒன்​றில் நடித்​தார். அதன் பிறகு அவர் நடிக்கவில்லை.

இந்​நிலை​யில் 13 வருடங்​களுக்​குப் பின் அவர் மீண்​டும் நடிக்கிறார். சஞ்​சத் தத் நடிக்​கும் ‘ஆக்ரி சவால்’ என்ற படத்​தில் சமீரா ரெட்டி முக்கிய கதா​பாத்​திரத்​தில் நடிக்​கிறார். இதில் திரிதா சவுத்​ரி, அமித்சாத், நமஷி சக்​ர​வர்த்​தி, மிருணாள் குல்கர்னி ஆகியோர் முக்​கிய கதாபாத்​திரங்​களில் நடித்​துள்ளனர். அபிஜீத் மோகன் வாரங் இயக்​கி ​உள்ளார்.

ஆர்.எஸ்.எஸ். பின்​னணி​யில் உரு​வாகும் இப்​படத்​தின் மூலம் சினிமாவுக்கு திரும்​பியது பற்றி பேசிய அவர், “நான் சினி​மாவுக்கு மீண்​டும் திரும்​பியது பாது​காப்​பான கதா​பாத்​திரங்​களில் நடிப்பதற்காக அல்ல. ‘ஆக்ரி சவால்’ திரைப்​படம் அப்​படி​யான ஒரு படம் அல்ல. ஆர்​.எஸ்​.எஸ் பற்​றிய எனது புரிதல் மிகக் குறைவாகவும், அரைகுறைத் தகவல்​களால் உரு​வான​தாக​வும் இருந்​தது.

ஆனால், இப்​படத்​தின் திரைக்​கதையைப் படித்த பிறகு, எனக்​குத் தெரிந்த பல விஷ​யங்​கள் முரணாக இருப்​பதை உணர்ந்​தேன். அந்த உணர்வு என்​னுள் ஆழமாகப் பதிந்​தது. இப்​படம் உங்​களை அசைத்துப் பார்க்​கும், உங்​கள் நம்​பிக்​கைகளுக்​குச் சவால் விடும், நீங்​கள் உண்​மை​யாக ஏற்​றுக்​கொண்ட விஷ​யங்​களைக் கேள்வி கேட்​கத் தூண்​டும்.

எனது மறு​பிர​வேசம் அப்​படி துணிச்​சலான ஒன்​றாக இருக்க வேண்டும் என்​றும், விவாதங்​களைத் தூண்ட வேண்​டும் என்​றும் விரும்​பினேன்; இந்​தப் படம் அதற்கு சரி​யான​தாக அமைந்​தது” என்றார். இப்​படம் மே 8ம் தேதி வெளி​யாக இருக்​கிறது.

SCROLL FOR NEXT