தென்னிந்திய சினிமா

தேவி ஸ்ரீ பிர​சாத் ஜோடி​ ஆகிறார் மிருணாள் தாக்குர்!

நிலா

தமிழ், தெலுங்​கில் முன்​னணி இசை அமைப்​பாள​ராக இருப்​பவர் தேவி ஸ்ரீ பிர​சாத். பல சூப்​பர் ஹிட் பாடல்​களைக் கொடுத்​துள்ள இவர், கதா​நாயக​னாக நடிக்​கும் படம் ‘எல்​லம்​மா’. இதை தெலுங்கில் வரவேற்பை பெற்ற ‘பல​காம்’ என்ற படத்தை இயக்கிய வேணு எல்​டண்​டாடி இயக்​கு​கிறார்.

ஸ்ரீவெங்​கடேஷ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு, சிரிஷ் தயாரிக்​கின்​றனர். இதில் பார்சி என்ற கதா​பாத்​திரத்​தில் தேவி ஸ்ரீ பிர​சாத் நடிக்​கிறார். .

இப்​படம் தெலுங்​கு, தமிழ் உள்பட 5 மொழிகளில் உரு​வாகிறது. இதில் சாய் பல்​லவி அல்​லது கீர்த்தி சுரேஷ் ஆகிய இரு​வரில் ஒரு​வர் கதா​நாயகி​யாக நடிப்​பார்​கள் என்று முதலில் கூறப்​பட்​டது. இப்​போது, மிருணாள் தாக்​குரிடம் படக்​குழு பேசி வருவ​தாகத் தெரி​கிறது.

இந்தி நடிகை​யான மிருணாள் தாக்குர், சீதா ராமம் படம் மூலம் தென்​னிந்​தி​யா​விலும் புகழ்​பெற்​றார். அவர் தெலுங்​கில் நடித்த ஹாய் நன்​னா, பேமிலி ஸ்டார், கல்கி 2898 ஏடி, டெகா​யிட் ஆகிய படங்கள் அவருக்குப் புகழைப் பெற்​றுத் தந்​தன

SCROLL FOR NEXT