நடிகை கயாடு லோஹர்

 
தென்னிந்திய சினிமா

சமூக ஊடகங்​களில் இருந்து விலகினார் கயாடு லோஹர்

நிலா

தமிழில் பிரதீப் ரங்​க​நாதன் நடித்த ‘டி​ராகன்’ மூலம் அறி​முக​மான நடிகை கயாடு லோஹர், அடுத்து இதயம் முரளி, மஞ்​சணத்​தி, இம்​மோர்​டல் உள்பட சில படங்​களில் நடித்து வரு​கிறார். இவர் சமூக ஊடகங்​களில் இருந்து சில காலம் விலகி இருக்​கப் போவ​தாக அறிவித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள இன்​ஸ்டா பதி​வில், “சமூக ஊடகங்​களில் இருந்து சிறிது காலம் விலகி இருக்​கப் போகிறேன். சில நேரங்​களில், நம் உடலுக்​குக் கொடுக்​கும் அதே வகை​யான ஓய்வு மனதுக்​கும் தேவைப்​படு​கிறது. அதனால் சில காலம் திரைக்கு அப்​பாற்​பட்ட வாழ்க்​கை​யுடன் அதிக நேரம் செல​விட விரும்​பு​கிறேன்.

எனக்கு ஆதர​வளித்த, ஊக்​கு​வித்த, அன்​பைப் பரப்​பிய அனை​வருக்​கும் நன்​றி. உங்​கள் செய்​தி​களும் அன்​பும் எனக்கு மிக​வும் முக்​கிய​மானவை. நான் சிறிது காலம் சமூக ஊடகங்​களில் இருந்து விலகி இருப்​பேன், ஆனால் முக்​கிய அறி​விப்​பு​கள் இருந்தால், எனது குழு​வினர் இந்​தக் கணக்​கில் பகிர்ந்​து​ கொள்​வார்​கள்” எனக்​ குறிப்​பிட்​டுள்​ளார்​.

SCROLL FOR NEXT