தென்னிந்திய சினிமா

காஸ்​டிங் இயக்​குநர் மீது நடிகை புகார்

நிலா

துல்​கர் சல்​மான் கதா​நாயக​னாக நடிக்​கும் தெலுங்கு படம், ‘ஆகாசம்லோ ஒக தாரா’. இப்​படத்​தில் நடிக்க, தெலுங்கு நடிகை ஒரு​வரை காஸ்​டிங் டைரக்​டர் பிர​சாத் என்​பவர் தொடர்பு கொண்டார்.

அவர் மூல​மாக அதில் நடிக்​கும் வாய்ப்பு கிடைத்​தது. அவருக்​குச் சம்​பள​மாக ரூ.90 ஆயிர​மும் கார் வாடகைக்​காக ரூ.38 ஆயிரம் தரு​வ​தாக​வும் பிர​சாத் ஒப்​புக்​கொண்​டிருந்​தார். ஆனால், படப்பிடிப்பு முடிந்த பிறகும் பணத்​தைத் தரவில்லை.

இதுகுறித்து தொடர்ந்து கேட்​ட​போது, கடந்த பிப்​ர​வரியில் ஹைதரா​பாத் பாஞ்​சரா ஹில்​ஸில் உள்ள தயாரிப்​பாளர் தில் ராஜு அலுவல​கத்​துக்கு அரு​கில் வரு​மாறு பிர​சாத் அழைத்துள்ளார். அங்கு சென்ற​ போது பிர​சாத் அநாகரி​க​மாக நடந்து கொண்​ட​தாக​வும் பாலியல் ரீதி​யான கோரிக்​கைகளை முன்​வைத்​த​தாக​வும் தனது ஆசைக்கு இணங்கி நடந்​தால் திரைத்​துறை​யில் பெரிய வாய்ப்புகளைப் பெற்​றுத் தரு​வ​தாக​வும் கூறி அத்​து​மீறலில் ஈடுபட்டா​ராம்.

அங்​கிருந்து அவர் தப்​பித்து வந்​துள்​ளார். சில மாதங்​களுக்​குப் பிறகு நடிகை​யின் தா​யார் பணம் பற்றி கேட்​ட​போது, பிர​சாத் கொலை மிரட்​டல் விடுத்​ததாகக் கூறப்​படு​கிறது. இதுபற்றி பாஞ்சரா ஹில்​ஸ்​ போலீ​ஸில்​ நடிகை புகார்​ அளித்​தார். போலீஸார்​ வழக்​குப்​ பதிவு செய்​து வி​சாரித்​து வருகின்றனர்.

SCROLL FOR NEXT